அமி வசி

இந்திய வடிவழகி

அமி வசி (Ami Vashi) இந்திய நாட்டின் வடிவழகியாவார். நடனக் கலைஞராகவும் இந்திய அழகிப்போட்டியை வென்றவராகவும் அறியப்படுகிறார். இவர் 2003 ஆம் ஆண்டில் நடைபெற்ற பெமினா மிசு இந்தியா போட்டியில் பட்டத்தை வென்றார். 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக அழகி போட்டியில் இந்திய நாட்டினை பிரதிநிதித்துவப்படுத்தினார். அப்போட்டியில் இவர், தேர்ந்தெடுக்கப்பட்ட இறுதிப் போட்டியாளர்கள் ஐந்து பேரில் நான்காவது இடத்தைப் பிடித்தார்.[1]

குடும்பம்

தொகு

இவரது தந்தையின் பெயர் செயப்பிரகாசு என்பதாகும். இவரது தாயார் பத்ரா வாசி ஆவார்.

தனிப்பட்ட தகவல்கள்

தொகு

அமி வசி அமெரிக்க நாட்டின் லாசு ஏஞ்சல்சில் வளர்ந்தார். இவர் தனது நேரத்தை கலிபோர்னியாவில் உள்ள பசடேனாவிற்கும் மும்பைக்கும் இடையே பிரித்துக் கொள்கிறார். இவர் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் ஆவார்.[2]

தொழில் வாழ்க்கை

தொகு

இவரது மாடல் தொடர்பான பணியைத் தவிர, வாசி இந்திய பாரம்பரிய நடனம் மற்றும் யோகா பயிற்சி செய்கிறார். மேலும் லாசு ஏஞ்சல்சு பகுதியிலும் இந்தியாவிலும் பல்வேறு சமூக சேவை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Ami Vashi: Sunsilk Femina Miss India-World 2003". The Times of India. 4 February 2003. பார்க்கப்பட்ட நாள் 10 February 2010.
    - Khalla, Avinash (April 2003). "India's 2003 Finalists". The South Asian. பார்க்கப்பட்ட நாள் 10 February 2010.
    - Rozario, Rayan (12 May 2003). "Straight from the heart". The Hindu. Archived from the original on 6 June 2011. பார்க்கப்பட்ட நாள் 10 February 2010.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  2. 2.0 2.1 "Ami Vashi: Sunsilk Femina Miss India-World 2003". The Times of India (Bennett, Coleman & Co. Ltd.). 4 February 2003. http://timesofindia.indiatimes.com/city/delhi-times/Ami-Vashi-Sunsilk-Femina-Miss-India-World-2003/articleshow/36308463.cms. பார்த்த நாள்: 22 December 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமி_வசி&oldid=4135921" இலிருந்து மீள்விக்கப்பட்டது