அமீதா

இந்திய நடிகை

அமீதா ( Ameeta) கமர் சுல்தானா என்ற பெயரில் பிறந்த ஓர் இந்திய நடிகை ஆவார். இவர் தும்சா நஹின் தேகா,[1] மேரே மெஹபூப் மற்றும் கூஞ்ச் உத்தி ஷெஹ்னாய் போன்ற பாலிவுட் படங்களில் தோன்றினார்.

அமீதா
பிறப்புகமர் சுல்தானா
கொல்கத்தா, பிரித்தானிய இந்தியa
தேசியம்இந்தியர்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1953–1968

தொழில்

தொகு

ஆரம்பம்

தொகு

மதுபாலாவின் ரசிகையான அமீதா, பாதல் (1951) திரைப்படத்தில் தான் துணை நடிகை கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, ஷம்மி கபூர் நடித்த தோகர் திரைப்படத்திற்காக லெக்ராஜ் பக்ரி என்பவர் இவரை ஒப்பந்தம் செய்தார். ஜெய்ஜெயவந்தி என்று பெயர் வைக்கப்பட்டுள்ள ஒரு வேடத்தில் நடித்தார். இது இவரது முதல் அறிமுகத் திரைப்படம் ஆகும். விஜய் பட் இயக்கத்தில் வெளியான 1953 ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு (1954), திரைப்படத்தில் அமீதா கதாநாயகியாக அறிமுகமானார். அமீதா என்ற திரைப்பெயர் இந்தப் படத்தில் தோன்றியது. படம் தோல்வியடைந்தது, ஆனால் அமீதா அமர் கீர்த்தன், பாதல் அவுர் பிஜிலி, பாகி சர்தார் மற்றும் இந்திரசபா போன்ற படங்களில் தொடர்ந்து பணியாற்றினார்.

1956 ஆம் ஆண்டு வசூலில் சாதனை புரிந்த ஷிரின் ஃபர்ஹாத் திரைப்படத்தில் மதுபாலாவுடன் இவர் நடித்தபோது இவரது வாழ்க்கை ஒரு நல்ல திருப்பத்தை எடுத்தது. பின்னர் சம்மி கபூர் மற்றும் நளினி ஜெய்வந்த் ஆகியோருடன் அபிமான் மற்றும் ஜமானா மற்றும் ஹம் சப் சோர் ஹெய்ன் (1956) ஆகியவற்றில் முக்கிய பாத்திரங்களில் இவர் நடித்திருந்தர்.

சம்மி கபூருக்கு இணையாக தும்சா நஹின் தேகா (1957) படம் மூலம் அமீதாவின் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது. அமீதா ஒரு புதிய நட்சத்திரமாக புகழ் பெற்றார். படம் பெரிய வெற்றியைப் பெற்றது. ஆனாலும் இது இவரது திரை வாழ்க்கைக்கு பெரிதாக ஏதும் உதவவில்லை.

பிற்காலத் தொழில்

தொகு

பின்னர், ராக்கி (1962) மற்றும் மேரே மெஹபூப் (1963) போன்ற படங்களில் நடித்தது இவர் சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டாலும்,[2] முன்னணித் திரைப்படங்களில் இடம் பெறவில்லை. 1965 இல் ஹம் சப் உஸ்தாத் ஹை படத்தில் கிஷோர் குமாருக்கு இணையாக நடித்தார். 1965 வாக்கில் அமீதா ரிஷ்டே நாடே (1965), மற்றும் ஆஸ்ரா (1966) போன்ற படங்களில் எதிர்மறை மற்றும் வில்லத்தனமான கதாபாத்திரங்களில் நடித்தார். அரௌண்ட் தி வேர்ல்ட் (1967) மற்றும் ஹசீனா மான் ஜாயேகி (1968) போன்ற படங்களில், இளம் நட்சத்திரங்களான ராஜ்ஸ்ரீ மற்றும் பபிதா ஆகியோருடன் துணை வேடங்களில் காணப்பட்டார். ஹசீனா மான் ஜாயேகி (1968) படத்திற்குப் பிறகு, முன்னணி பாத்திரங்கள் கிடைக்காததால் ஏமாற்றமடைந்த அமீதா திரைப்படத் துறையை விட்டு வெளியேறி திருமண வாழ்க்கைக்குல் நுழைந்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

அமீதா திரைப்பட உலகில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, நடிகரும் இயக்குனருமான கம்ரான் என்பவரை மணந்தார். இவர்களுக்கு சபியா என்ற மகள் இருந்தார். கம்ரன் ஃபரா கான் மற்றும் சஜித் கான் ஆகியோரின் உயிரியல் தந்தை ஆவார். சபியாவும் இந்தி படங்களில் முன்னணி நடிகையாக அனோகா ரிஷ்தா (1986) மற்றும் கிலாடி (1992) மற்றும் 100 நாட்கள் (1991) ஆகிய படங்களில் நடித்தார்.

விருதுகள்

தொகு

மேரே மெஹபூப் (1962) படத்திற்காக அமீதா சிறந்த துணை நடிகையாக பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.[3] 20 நவம்பர் 2005 அன்று சினி & டிவி கலைஞர்கள் சங்கத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருதை ஏற்க ஒருமுறை மட்டுமே அவர் தனிமையில் இருந்து வெளியே வந்தார், பின்னர் இவரைப் பற்றிய தகவல் ஏதுமில்லை.

மேற்கோள்கள்

தொகு
  1. "Horse carriages to be phased out... - the Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 10 June 2015. பார்க்கப்பட்ட நாள் 11 January 2016.
  2. "1st Filmfare Awards 1953" (PDF). Archived from the original (PDF) on 12 June 2009. பார்க்கப்பட்ட நாள் 21 November 2016.
  3. "1st Filmfare Awards 1953" (PDF). Archived from the original (PDF) on 12 June 2009. பார்க்கப்பட்ட நாள் 21 November 2016.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமீதா&oldid=3946439" இலிருந்து மீள்விக்கப்பட்டது