அமீனுல்ரசித் அம்சா இறப்பு

மலேசிய காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப் பட்ட மாணவர்

அமீனுல்ரசித் அம்சா (ஆங்கிலம்: Aminulrasyid Amzah); (பிறப்பு: ஆகஸ்டு 1995 - இறப்பு: 26 ஏப்ரல் 2010) என்பவர் அரச மலேசிய காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப் பட்டவர். மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்தவர். பள்ளி மாணவரான அவருக்கு அப்போது 14 வயது.

2010 ஏப்ரல் 26-ஆம் தேதி, அதிகாலை 1.10 மணி அளவில், ஒரு கார் விபத்தில் சிக்கிய அமீனுல்ரசித் அம்சா, தப்பித்து ஓடும் போது, சூட்டுச் சம்பவத்திற்கு இலக்காகி மரணமுற்றார்.[1]

பொது

தொகு

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தேசியத் தலைப்புச் செய்திகளாக மாறியது. அதன் பின்னர் நாடளாவிய நிலையில் பொது மக்களின் எதிரலைகள் தோன்றின.

அதன் தொடர்ச்சியாக மலேசிய உள்துறைத் துணை அமைச்சர் அபு செமன் யூசோப் தலைமையில் ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப் பட்டது.[2]

அமீனுல்ரசித் குடும்பத்திற்கு உதவிகள்

தொகு

அமீனுல்ரசித் அம்சா இறப்பிற்குப் பின்னர் அந்தச் சம்பவம் அரசியலாக்கப் படுவதாக அரசியல் கட்சிகள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டன. ஒருபுறம் ஆளும் கூட்டணியான பாரிசான் நேசனல் கட்சி. இந்தக் கட்சி பாரம்பரியமாகக் காவல் துறையுடன் தொடர்பு உடையது.

மற்றொரு புறம் ஆளும் கூட்டணியின் எதிர்ப்புக் கட்சியான சிலாங்கூர் மாநில ஆளும் கூட்டணி பாக்காத்தான் ராக்யாட் கட்சி. இரு கட்சிகளும் அமீனுல்ரசித் அம்சாவின் குடும்பத்திற்கு பற்பல உதவிகளை வழங்கின.

கர்பால் சிங்

தொகு

எதிர்க்கட்சித் தலைவர் கர்பால் சிங் அமினுல்ரசித் குடும்பத்தின் வழக்கறிஞராக நியமிக்கப் பட்டார். மலேசிய காவல் துறைத் தலைவர் ராஜினாமா செய்யுமாறு பாக்காத்தான் ராக்யாட் அரசியல்வாதிகள் பலரும் கேட்டுக் கொண்டனர்.[3][4][5]

இந்தச் சம்பவத்தில் போலீஸ் அதிகாரி செனாயின் சுபி (Jenain Subi) என்பவர், ஆரம்பத்தில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப் பட்டார். பின்னர் இந்த வழக்கு மலேசிய உயர் நீதிமன்றத்திற்குச் சென்றது. அந்தப் பள்ளி மாணவன் 20 முறை சுடப்பட்டச் சான்றுகள் நீதிமன்றத்தில் முன் வைக்கப் பட்டன. இருப்பினும் போலீஸ் அதிகாரி செனாயின் சுபியின் தண்டனை ரத்து செய்யப் பட்டது.

செனாயின் சுபியின் தண்டனை ரத்து செய்யப் பட்டது "நியாயமற்றது" என்று அமீனுல்ரசித் அம்சாவின் குடும்ப உறுப்பினர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.[6]

தனிப்பட்ட முறையில் மன்னிப்பு

தொகு

நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, அமீனுல்ரசித் அம்சாவின் குடும்பத்தினரிடம் மலேசிய காவல் துறைத் தலைவர் மன்னிப்புக் கேட்க மறுத்து விட்டார். ஆனால், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி செனாயின் சுபி தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.[7][1]

மேலும் காண்க

தொகு


மேற்கோள்கள்

தொகு