அமெரிக்க செஞ்சிலுவை செவிலிய சேவை

அமெரிக்க செஞ்சிலுவை செவிலிய சேவை (American Red Cross Nursing Service) 1909 ஆம் ஆண்டில் இயேன் அர்மிண்டா தெலானோ (1862-1919) என்பவரால் தொடங்கப்பட்டது. செவிலியரும் அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கத்தின் உறுப்பினருமான இயேன் அர்மிண்டா தெலானோ முதலாம் உலகப் போரில் அமெரிக்கா நுழைவதற்கு சற்று முன் தயாராக இருக்க இராணுவ செவிலியர் படையின் இருப்புப் பகுதியாக இவர் இருந்தபோது இச்செவிலியர் சேவையை ஏற்பாடு செய்தார். அமெரிக்க செவிலியர் சம்மேளனத்தின் தலைவரான மேரி அடிலெய்ட் நட்டிங் மற்றும் இராணுவ செவிலியப் பள்ளியின் தலைவர் அன்னி வார்பர்டன் குட்ரிச்சு ஆகியோருடன் இணைந்து இயேன் அர்மிண்டா தெலானோ முக்கிய போர்க்கால முடிவுகளை எடுத்தார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. Jennifer Casavant Telford, "The American Nursing Shortage during World War I: The Debate over the Use of Nurses' Aids," Canadian Bulletin of Medical History (2010) 27#1 pp 85-99.