அமெரிக்க பார்வையளவையியல் அகாதமி

அமெரிக்க பார்வையளவையியல் அகாதமி (American Academy of Optometry) அமெரிக்காவின் புளோரிடாவிலுள்ள ஒர்லாண்டோவை தளமாகக் கொண்ட பார்வையளவையியலாளர்கள் அமைப்பாகும்.[1] ஆராய்ச்சி மற்றும் அறிவைப் பரப்புதல் ஆகிய இரண்டையும் ஊக்குவிப்பதன் மூலம் பார்வையளவையியல் நடைமுறையில் சிறந்து விளங்குவதைத் தக்கவைத்து மேம்படுத்துவதே இந்த அகாதமியின் குறிக்கோளாகும்.

அமெரிக்க பார்வையளவையியல் அகாதமி ஆண்டுதோறும் கூட்டத்தை நடத்துகிறது. மாதாந்திர அறிவியல் இதழையும் வெளியிடுகிறது. தேசிய அளவில் போட்டி மானியங்கள், உதவித்தொகைகள் மற்றும் பிற நிதி வாய்ப்புகளை உள்ளடக்கிய செயல்முறையின் மூலம் பார்வையளவையியலாளர்களுக்கு நற்சான்றிதழ்கள் மற்றும் நிலை அறிக்கைகளை அகாதமி வெளியிடுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "What is the Academy?". www.aaopt.org. American Academy of Optometry. பார்க்கப்பட்ட நாள் 20 December 2020.