அமெரிசியம் அறுபுளோரைடு

வேதிச் சேர்மம்

அமெரிசியம் அறுபுளோரைடு (Americium hexafluoride) AmF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அமெரிசியம் உலோகமும் புளோரினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. இன்னும் கருதுகோள் நிலையிலேயே இச்சேர்மம் பற்றிய கருத்துகள் உள்ளன.[1][2] அமெரிசியம் டெட்ராபுளோரைடை புளோரினேற்றம் செய்து அமெரிசியம் அறுபுளோரைடு தயாரிக்கும் ஒரு தயாரிப்பு முறை 1990 ஆம் ஆண்டில் முயற்சிக்கப்பட்டு தோல்வியில் முடிந்தது.[3] 1986 ஆம் ஆண்டில் இதை அடையாளம் காண மேற்கொள்ளப்பட்ட உயர் செயல்பாட்டுத் திரவ நிறச்சாரல் பிரிகை முடிவுகள் இன்னும் முடிவுக்கு வராமலேயே உள்ளன.[4] எண்கோணச்சமச்சீர் நிலையிலிருந்து சிதைவு மூலம் உருக்குலைந்து இது உருவாகலாம் என வேதிக் கணக்கீடுகள் தெரிவிக்கின்றன.[4]

அமெரிசியம் அறுபுளோரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
அமெரிசியம்(VI) புளோரைடு
இனங்காட்டிகள்
90116-77-1 Y
InChI
  • InChI=1S/Am.6FH/h;6*1H/q+6;;;;;;/p-6
    Key: MOPXCOMYGFTBPM-UHFFFAOYSA-H
யேமல் -3D படிமங்கள் Image
  • F[Am](F)(F)(F)(F)F
பண்புகள்
AmF6
வாய்ப்பாட்டு எடை 356.99 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

313-333 கெல்வின் வெப்பநிலையில் நீரற்ற HF இல் உள்ள அமெரிசியம் முப்புளோரைடும் KrF2 சேர்மமும் சேர்ந்து வினைபுரிந்தால் அமுக்கப்பட்ட மற்றும் வாயு நிலை AmF6 இரண்டும் தயாரிக்கப்படலாம் என்று முன்மொழியப்பட்டது.[5]

AmF3 + KrF2 → AmF6 + Kr[6]

மேற்கோள்கள்

தொகு
  1. Meyer, G.; Morss, L. R. (6 December 2012). Synthesis of Lanthanide and Actinide Compounds (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 80. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-94-011-3758-4. பார்க்கப்பட்ட நாள் 29 March 2023.
  2. O'Donnell, T. A. (8 June 2017). The Chemistry of Fluorine: Comprehensive Inorganic Chemistry (in ஆங்கிலம்). Elsevier. p. 1093. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4831-4642-3. பார்க்கப்பட்ட நாள் 29 March 2023.
  3. Malm, J. G.; Weinstock, B.; Weaver, E. E. (1958). "The Preparation and Properties of NpF6; a Comparison with PuF6". The Journal of Physical Chemistry 62 (12): 1506–1508. doi:10.1021/j150570a009. 
  4. 4.0 4.1 Seppelt, Konrad (2015). "Molecular Hexafluorides". Chemical Reviews 115 (2): 1296–1306. doi:10.1021/cr5001783. பப்மெட்:25418862. 
  5. Silva, R. J.; Bidoglio, G.; Robouch, P. B.; Puigdomenech, I.; Wanner, H.; Rand, M. H. (2 December 2012). Chemical Thermodynamics of Americium (in ஆங்கிலம்). Newnes. p. 114. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-444-59935-3. பார்க்கப்பட்ட நாள் 29 March 2023.
  6. Прусаков, Владимир Николаевич (2013). Избранные научные труды (in ரஷியன்). Rosatom. p. 59. பார்க்கப்பட்ட நாள் 29 March 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமெரிசியம்_அறுபுளோரைடு&oldid=3745395" இலிருந்து மீள்விக்கப்பட்டது