அமேசான் கடலடிப் பாறை
அமேசான் கடலடிப் பாறைகள் (Amazon Reef) [1] (சிலவிடங்களில் அமேசானியக் கடலடிப் பாறைகள் எனவும் குறிக்கப்படுகின்றன[2]) பிரெஞ்சு கயானா வடக்கு பிரேசில் கடலோரத்தில் அமைந்துள்ள விரிவான பவள, பஞ்சு கடலடிப் பாறையமைப்புகளாகும். உலகின் மிகப் பெரிய கடலடிப் பாறை அமைப்புகளில் ஒன்றாக இது அறியப்படுகின்றது. இந்த அமைப்பு 970 கிலோமீட்டர்கள் (600 மைல்கள்)* நீளமுள்ளதாகவும் 9,300 km2 (3,600 sq mi)* பரப்பளவில் அமைந்துள்ளதாகவும் புவியியலாளர்கள் மதிப்பிடுகின்றனர். இதனைக் கண்டறிந்தமைக்கான அறிவிக்கை ஏப்ரல் 2016இல் வெளியிடப்பட்டது; 2012இல் இப்பகுதியில் நடந்த கடலியல் ஆய்விற்குப் பிறகு இந்தக் கண்டுபிடிப்பு உறுதி செய்யப்பட்டது. 1950களிலிருந்தே அமேசான் ஆற்றின் கழிமுகத்தில் இத்தகைய பெரிய பாறையமைப்பு இருப்பதற்கான சான்றுகள் கிடைத்தவாறிருந்தது.
மேற்சான்றுகள்
தொகு- ↑ Vidal, John (April 23, 2016). "Huge coral reef discovered at Amazon river mouth". தி கார்டியன். Guardian Media Group. பார்க்கப்பட்ட நாள் April 23, 2016.
- ↑ Stone, Maddie (April 22, 2016). "There's a Gigantic Reef Surrounding the Amazon River and Nobody Noticed". Gizmodo. Gawker Media. பார்க்கப்பட்ட நாள் April 23, 2016.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் அமேசான் கடலடிப் பாறை தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.