அமேசான் வீராங்கனைகள்

தகோமி இராச்சிய அமேசான் வீராங்கனைகள், மேற்கு ஆப்பிரிக்காவின் தற்கால பெனின் நாட்டில் 1625 முதல் 1894-ஆம் ஆண்டு வரை இருந்த பழங்குடியின தகோமி இராச்சியத்தின் முன்னணி பெண் வீராங்கனைகள் ஆவார். முதலில் யானை வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட நிறுவப்பட்ட இந்த பெண் படைகளை, பின்னர் ஆப்பிரிக்காவை கைப்பற்ற வந்த ஐரோப்பியப் படைகளை எதிர்க்க, அமேசான் பெண்கள் படைக்குழுவை உருவாக்கியவர் இராணி ஹாங்பே (1708 - 1711) ஆவார்.

1890-களில் தகோமி இராச்சியத்தின் அமேசான் வீராங்கனைகள்
அமேசான் போர் வீராங்கனைகளின் தலைவி
அமேசான் பெண்கள் என அழைக்கபப்டும் குழுவினரின புகைப்படம், பாரிஸ்
1908-இல் நடைபெற்ற அமேசான் பெண் வீரர்களின் கூட்டம்

19-ஆம் நூற்றாண்டில் தகோமி இராச்சியத்திற்கு வருகை தந்த ஐரோப்பியர்கள், கிரேக்கப் புராணத்தில் இரக்கமற்ற வீரர்களை அமேசான்கள் என்று அழைப்பது போல், தகோமி இராச்சியத்தின் பெண் வீராங்கனைகளை அமேசான்கள் என்றே அழைத்தனர்.

தகோமி இராச்சியத்தின் பெரும்பாலன ஆண்களை ஐரோப்பியர்கள் அடிமைகளாகப் பிடித்து, ஐக்கிய அமெரிக்காவில் விற்பனை செய்ததால், ஆண்களின் தொகை குறைந்தது. இதனால் தகோமி இராச்சியத்தில் பெண்கள் அதிகப்படியாக இராணுவத்தில் சேர்க்கப்பட்டனர். ஐரோப்பியர்கள் இப்பெண் காவல் படையினரை அமேசான் வீராங்கனைகள் என்று அழைத்தனர்.[1]

1892-ஆம் ஆண்டில் தகோமி இராச்சியம், பிரான்சு நாட்டின் காலனி பிரதேசமாக மாறுவதற்கு முன்ன்னர், பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிரான இறுதிப் போர் ஒன்றில், 434 அமேசான் பெண் வீராங்கனைகளில் 17 மட்டுமே உயிருடன் திரும்பியதாகக் கூறப்படுகிறது.

அமேசான் பெண் வீராங்கனைகள் அரசன் மற்றும் அரசியின் மெய்க்காப்பாளர்களாகவும் பணியாற்றினர். இவர்கள் மனித இரையை வெகுமதியாகப் பெற்றனர். 1818 முதல் 1858-ஆம் ஆண்டு வரை தகோமி இராச்சியத்தை ஆண்ட மன்னர் கெசோ முதன்முதலில் அமேசான் பெண் வீராங்கனைகளை அதிகாரப்பூர்வமாக இராணுவத்தில் ஒருங்கிணைத்தார். ஏனெனில் ஐரோப்பிய அடிமை வர்த்தகம் காரணமாக, நாட்டில் ஆண்களின் மனிதவளம் பற்றாக்குறையாக இருந்தது.

தகோமி இராச்சியத்தின் அனைத்து அரசியல், மதம் மற்றும் இராணுவ அமைப்புகளில் ஆண்களுக்கு நிகரான ஒரு பெண் சமமான நிலையில் இருந்தாள். இருப்பினும், ஆண் அரசனே ஆட்சி செய்தான். அரசனின் பாரம்பரியத்தை அவரது வலிமைமிக்க பெண் வீரர்கள் மூலம் காக்கப்பட்டது. பல ஐரோப்பிய அடிமை வர்த்தகர்கள், கிறித்துவ மிஷனரிகள் மற்றும் காலனித்துவவாதிகள் அச்சமற்ற பெண்களுடனான சந்திப்புகளைப் பதிவுசெய்தாலும், அமேசான் பெண் வீராங்கனைகளின் வரலாறு விவரங்கள் நம்பமுடியாத அளவிற்கு இருந்தது.

1861-ஆம் ஆண்டில், இத்தாலிய பாதிரியார் ஃபிரான்செஸ்கோ போர்ஹெரோ, அமேசான் பெண் வீராங்கனைகளின் இராணுவப் பயிற்சியை கீழ்கண்டவாறு விவரிக்கிறார். பயிற்சிக்களத்தில் ஆயிரக்கணக்கான அமேசான் பெண் வீராங்கனைகள் 120 மீட்டர் நீளமுள்ள முட்கள் நிறைந்த அகாசியா புதர்களை வெறுங்காலுடன் சிணுங்காமல் கடந்தனர்.

1889-ஆம் ஆண்டில், பிரெஞ்சு காலனித்துவ நிர்வாகி ஜீன் பேயோல் என்பவர் தனது பயிற்சியின் ஒரு பகுதியாக, சிறைபிடிக்கப்பட்ட ஒரு இளம் அமேசான் பெண் வீராங்கனையை அணுகும் போது, அந்த அமேசான் பெண் அமைதியாக தன் வாளால் தன் உடலை வெட்டிக் கொண்டு, வாளில் பட்ட இரத்தத்தை நக்கிக் உறிஞ்சினாள் என்று கூறுகிறார்.

அமேசான் பெண் வீராங்கனைகளை தற்கால வரலாற்றாசிரியர்கள், உள்ளூர் ஃபோன் மொழியில் மினோ என்று குறிப்பிடுகின்றனர். மினோ என்பதை எங்கள் தாய்மார்கள் என்று மொழிபெயர்க்கப்படும். ஐரோப்பிய படைகளை எதிர்க்க, அமேசான் பெண்கள் படைக்குழுவை உருவாக்கியவர் இராணி ஹாங்பே (1708 - 1711) ஆவார்.

சூலை, 1892 - சனவரி 1894 முடிய நடைபெற்ற இரண்டாம் பிரான்சு=தகோமி போரின் போது, பெரும்பாலான அமேசான் பெண் வீராங்கனைகள் தோற்கடிகக்ப்பட்டனர். தகோமி இராச்சியம் பிரான்சு நாட்டின் காலனியாக மாறிய போது, பல அமேசான் பெண்கள் படைத்துறை பணியிலிருந்து விலகி இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டனர். சில அமேசான் பெண் வீராங்கனைகள் இரகசியமாக செயல்பட்டு, பிரான்சு அதிகாரிகளை கொன்றனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. Macdonald, Fleur (2018-08-26). "The legend of Benin's fearless female warriors". பிபிசி (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-08-26.

உசாத்துணை

தொகு

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமேசான்_வீராங்கனைகள்&oldid=3774950" இலிருந்து மீள்விக்கப்பட்டது