அமைப்பியல் திறனாய்வு
அமைப்பியல் திறனாய்வு என்பது, அமைப்பியக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட திறனாய்வு ஆகும். ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் எந்தப் பொருளையும், தனக்குள் பல உறுப்புகளைக் கொண்டதும், குறிப்பிட்ட ஓர் ஒழுங்கமைவுடம் கூடியதுமான ஒரு அமைப்பாக அமைப்பியல் காணுகிறது.[1] இந்த அமைப்பின் பகுதிகளாக இருக்கும் ஒவ்வொரு கூறும் தமக்கெனச் சிறப்பான செயற்பாடுகளைக் கொண்டுள்ளது. இச்செயற்பாடுகளூடாகவே அக்கூறுகள் முழுமையுடன் இணைந்துள்ளன. குறிப்பிட்ட அமைப்பொன்றின் பண்புகள் அல்லது கூறுகளை அமைப்புக்கு வெளியில் இருந்து ஆராயக் கூடாது, அதன் உள்ளிருந்தே ஆராய வேண்டும் என்பதே அமைப்பியல் ஆய்வு முறையின் முக்கியமான அம்சம்.[2]
குறிப்புக்கள்
தொகுஉசாத்துணைகள்
தொகு- பஞ்சாங்கம், க., இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும், அன்னம், தஞ்சாவூர், 2011.
- நடராசன், தி. சு., திறனாய்வுக் கலை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, 2009 (ஏழாம் பதிப்பு).