அமோசு சுமித்

அமெரிக்க வேதியியலாளர்

அமோசு பி. சுமித் III (Amos B. Smith III) ஓர் அமெரிக்க வேதியியலாளர் ஆவார். 1944 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 26 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.

அமோசு பி. சுமித் III
Amos B. Smith III
பிறப்புஆகத்து 26, 1944
வாழிடம்பென்சில்வேனியா
துறைகரிமவியல், உயிர்க்கரிமவியல், பொருளியல் வேதியியலாளர், வேதியியல்
பணியிடங்கள்பென்சில்வேனியா பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்ராக் பெல்லர் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்வில்லியம் சி. அகோசுட்டா
அறியப்படுவதுஇயற்கைப் பொருட்களின் ஒட்டுமொத்தத் தொகுப்பு வினை
விருதுகள்பெர்கின் பரிசு

சிக்கலான இயற்கை பொருட்கள் உற்பத்தியின் ஒட்டு மொத்த தொகுப்பு மற்றும் பாலூட்டிகளின் இனக்கவர்ச்சி இயக்குநீர் வேதியியல் ஆகியவற்றில் மேற்கொண்ட ஆராய்ச்சிகளுக்காக இவர் நன்கு அறியப்படுகிறார்.

தற்போது மோனெல் வேதியியல் இயலுணர்வு மையத்தில் [1] பணிபுரிந்து வருகிறார். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறையில் வேதியியலின் ரோட்சு-தாம்சன் பேராசிரியர் பதவியை வகித்து வருகிறார். [2]

அமோசு பி. சுமித் III அமெரிக்க கலை மற்றும் அறிவியல் கல்விக்கூடத்திலும், பாரிசு தொழிற்சாலை இயற்பியல் மற்றும் வேதியியல் உயர் கல்வி நிறுவனத்திலும் உறுப்பினராக உள்ளார். [3]

2015 ஆம் ஆண்டு ராயல் வேதியியல் சமூகத்தின் கரிம வேதியியலுக்கான பெர்கின் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. புதிய கரிமவேதியியல் வினை வளர்ச்சி, சிக்கலான இயற்கைப் பொருட்கள் தயாரிப்புக்கான ஒட்டுமொத்த தொகுப்பு மற்றும் மருத்துவ வேதியியலுக்கான புதிய சிறிய மூலக்கூறுகள் ஆகியவற்றிற்கான இவரது சிறந்த பங்களிப்புகளுக்காக" இவ்விருது வழங்கப்பட்டது. [4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Scientific Staff". Monell Chemical Senses Center. Archived from the original on 5 September 2008. பார்க்கப்பட்ட நாள் August 6, 2008.
  2. "The Smith Research Group". University of Pennsylvania, Department of Chemistry. Archived from the original on 19 July 2008. பார்க்கப்பட்ட நாள் August 6, 2008.
  3. ESPCI ParisTech ISC பரணிடப்பட்டது நவம்பர் 26, 2008 at the வந்தவழி இயந்திரம்
  4. "RSC Perkin Prize for Organic Chemistry 2015 Winner". Royal Society of Chemistry. 5 May 2015. பார்க்கப்பட்ட நாள் 26 May 2015.

புற இணைப்புகள்

தொகு
  • குழு வலைத்தளம் [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமோசு_சுமித்&oldid=4041383" இலிருந்து மீள்விக்கப்பட்டது