அம்ஜத் உல்லா கான்

இந்திய அரசியல்வாதி

அம்ஜத் உல்லா கான்(Amjed Ullah Khan) (பிறப்பு: செப்டம்பர் 23, 1972) முன்னாள் கூட்டுரிமைக்குழு உறுப்பினர், 35 அசாம்புரா பிரிவு (ஜிஹெச்எம்சி) மற்றும் இந்திய மாநிலமான தெலுங்கானாவில் ஹைதராபாத்தில் உள்ள மஜ்லிஸ் பச்சாவ் தெஹ்ரீக்கின் (எம்பிடி) இளைஞர் தலைவர் ஆவார்.[1] அவர் தனது கருத்துக்கள் மற்றும் பார்வையினடிப்படையில் சர்ச்சைக்குரியவராக அறியப்படுகிறார். அனைத்திந்திய மஜ்லிசே-இ-இத்திகாதுல் முசுலிமீன் (AIMIM) அமைப்பின் முக்கிய எதிர்ப்பாளராக உள்ளார்.

அம்ஜத் உல்லா கான்
ஊடகப் பேச்சாளர், மஜ்லிஸ் பச்சாவ் தெஹ்ரீக்
முன்னையவர்மஜீத் உல்லா கான் ஃபர்ஹத்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1972 (அகவை 51–52)
ஐதராபாத்து
அரசியல் கட்சிமஜ்லிஸ் பச்சாவ் தெஹ்ரீக்
பிள்ளைகள்அஃப்பான் உல்லா கான்
வாழிடம்(s)சஞ்சல்குடா, ஐதராபாத்து
அம்ஜத் உல்லா கான்
முன்னாள் கூட்டுரிமைக்குழு உறுப்பினர், 35 அசாம்புரா மண்டலம் (ஜிஎச்எம்சி)
பின்னவர்மொகைய்தீன் அப்ரார்(ஏஐஎம்ஐஎம்)
தொகுதி35 அசாம்புரா(ஜிஎச்எம்சி)

அம்ஜெத் உல்லா கான் 5 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த அமானுல்லா கானின் மகன் ஆவார். டி.ஆர்.ஆர் கல்லூரியில் ஒரு முஸ்லிம் சிறுமியை கடத்தி கற்பழிப்பு வழக்கில் தலையிட்டபோது அவர் புகழ் பெற்றார். சத்ய பிரகாஷ் சிங் ஒரு சிறுமியைக் கடத்தி 17 மாதங்கள் சிறை வைத்திருந்தார், அந்த நேரத்தில் அச்சிறுமியை அவர் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். பாதிக்கப்பட்டவரின் பெற்றோர் குற்றத்தைப் புகாரளித்தபோது, சிங்கின் சகோதரர் ஒரு முக்கிய வழக்கறிஞர் என்பதால் உள்ளூர் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அம்ஜத் உல்லா கான் காவல்துறை மற்றும் சிங்குக்கு எதிராக ஒரு கிளர்ச்சி இயக்கத்தை வழிநடத்தினார், மேலும், ஆயிரக்கணக்கான இளைஞர்களுடன் சேர்ந்து காவல்துறையினருக்கு கடும் அழுத்தம் கொடுத்தார். [2]

மஜ்லிஸ் பச்சாவ் தெஹ்ரீக் அரசியல் நடவடிக்கைகளுக்குப் பின்னால் உள்ள ஒரே ஆளுமை அஜ்மத் உல்லா கான் ஆவார்.

குறிப்புகள் தொகு

  1. "Muslim Mirror". Archived from the original on 18 November 2015. பார்க்கப்பட்ட நாள் 27 October 2015.
  2. "MBT Represents Student Rape Case to APSHRC". The Siasat Daily. 17 September 2013.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்ஜத்_உல்லா_கான்&oldid=3069752" இலிருந்து மீள்விக்கப்பட்டது