அம்பன்காலை

அம்பன்காலை (Ambankalai) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டாறு என்ற ஊருக்கு அருகிலுள்ள ஒரு சிறிய கிராமமாகும். இங்கு விவசாயம் தான் முக்கிய தொழிலாகும். வாழை, தென்னை, மிளகு போன்ற பயிர்கள் அதிகமாக பயிரிடப்படுகின்றன. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் கோதையாறு அணையிலிருந்து பாசனத்திற்குத் தேவையான நீர் கிடைக்கிறது. தமிழ் மற்றும் மலையாளம் பேசும் மக்கள் இங்கு வாழ்கின்றனர்.[1]

வட்டக் கோட்டை கோட்டையிலிருந்து கடலின் தோற்றம்
மாத்தூர் தொட்டிப் பாலம், திருவட்டாறு அருகில், தெற்காசியாபின் மிக நீளமான தொட்டிப் பாலம்
திற்பரப்பு அருவி

மேற்கோள்கள்

தொகு
  1. "Villages in Kanyakumari District: Ambalakadai, Ambankalai, Atchenkulam, Azhagappapuram, Chenkody, Chinnathurai, Kappukad, Karuparai, Kattathurai, Kesa" (in ஆங்கிலம்). General Books. 1 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 1 செப்டம்பர் 2022. {{cite web}}: Check date values in: |access-date= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பன்காலை&oldid=3927162" இலிருந்து மீள்விக்கப்பட்டது