அம்பர்ட்டோ ரியோசு லாப்ரடா
அம்பர்ட்டோ ரியோசு லாப்ரடா (Humberto Ríos Labrada) கியூபா நாட்டைச் சேர்ந்த ஒரு நாட்டுப்புற இசைக் கலைஞர், விவசாய விஞ்ஞானி மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார்.கியூபாவின் விவசாயத்தில் பல்லுயிர் மற்றும் நிலையான வளர்ச்சிக்காக லாப்ரடா முன்னெடுத்த முயற்சிகளுக்காக 2010 ஆம் ஆண்டு கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டது.[1]
அம்பர்ட்டோ ரியோசு லாப்ரடா Humberto Ríos Labrada | |
---|---|
தேசியம் | கியூபா நாட்டவர் |
பணி |
|
விருதுகள் | கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது (2010) |
விவசாயிகளுடன் பயிர் பன்முகத்தன்மையை அதிகரிக்கவும், குறைந்த உள்ளீட்டு விவசாய முறைகளை உருவாக்கவும் இவர் பணியாற்றி வருகிறார். கியூபாவின் வேதியியல் சார்புநிலையிலிருந்து விடுபடும் நீடித்த விவசாயத்தை ஊக்குவித்தார். உள்ளூர் வேளாண் கண்டுபிடிப்புகளுக்கான தேசிய வேளாண் அறிவியல் நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளராக பணியாற்றியுள்ளார். கியூபாவின் நிலையான விவசாயத் துறையை வளர்ப்பதில் தனது நேரத்தைச் செலவழித்து தொடர்ந்து கவனம் செலுத்துகிறார். மெக்சிகோ மற்றும் பொலிவியா முழுவதும் இதேபோன்ற விவசாயி தலைமையிலான பல்லுயிர் திட்டங்களின் மேம்பாட்டில் ஈடுபட்டுள்ளார். சமூகத்தை பல்லுயிர் பெருக்கத்தில் ஈடுபடுத்தவும், நிலையான விவசாயத்தை கொண்டாடும் பாடல்களை நிகழ்த்தவும் அவர் தனது இசையை பெரும்பாலும் பயன்படுத்துகிறார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "2010 Recipient for Islands & Island Nations". Goldman Environmental Prize. Archived from the original on 23 November 2010. பார்க்கப்பட்ட நாள் 11 November 2010.
- ↑ "Humberto Ríos Labrada". Goldman Environmental Foundation (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.