அம்பாதி இக்கவம்மா
அம்பாதி இக்கவம்மா (Ambadi Ikkavamma) இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மலையாள மொழி எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஆவார்.[1] மலையாளத்தைத் தவிர, ஆங்கிலம், இந்தி மற்றும் சமசுகிருத மொழி இலக்கியங்களிலும் இவர் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தார்.[2]
அம்பாதி இக்காவம்மா Ambadi Ikkavamma | |
---|---|
பிறப்பு | அம்பாதி இக்காவம்மா 12 சனவரி 1898 திருப்பூணித்துறை (தற்பொழுது கேரளம்), இந்தியா |
இறப்பு | 30 சனவரி 1980 (வயது 82) |
தொழில் | எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் |
மொழி | மலையாளம், ஆங்கிலம், இந்தி, சமசுகிருதம் |
வாழ்க்கை மற்றும் தொழில்
தொகு1898 ஆம் ஆண்டு சனவரி மாதம் 12 ஆம் தேதியன்று அம்பாதி இல்லத்தைச் சேர்ந்த நானியம்மா மற்றும் கொச்சு கோவிந்த மேனன் ஆகியோரின் மகளாக இக்கவம்மா திருப்பூணித்துறையில் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை திருப்பூணித்துறையில் முடித்து, உயர்நிலைப் பள்ளிக் கல்வியை புனித தெரசா கன்னியர்மடப் பள்ளியில் முடித்தார்.. நீண்ட காலம் ஆசிரியராக பணியாற்றிய இக்கவம்மா, ஓர் இசைக் கலைஞராகவும் இருந்தார். இவரது படைப்புகளில் பெரும்பாலானவை பிற மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டவையாகும்.. அனசக்தி யோகா மற்றும் ஒரு தந்தை தனது மகளுக்கு எழுதிய கடிதங்கள் (சவகர்லால் நேரு) போன்றவை அவற்றில் முக்கியமானவையாகும். . பாலகதைகள் (குழந்தைகளின் கதைகள்) என்ற தலைப்பில் இவர் எழுதிய படைப்புக்கு 1956 ஆம் ஆண்டில் இந்திய அரசு குழந்தைகள் இலக்கிய விருது வழங்கி சிறப்பித்தது. [3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Cummār, Ṭi Eṃ (1964). ഭാഷാഗദ്യസാഹിത്യ ചരിത്രം (in மலையாளம்). Vitaraṇaṃ.
- ↑ സർ_വവിജ്ഞാനകോശം, വാല്യം 3, പേജ് 576; സ്റ്റേറ്റ് ഇൻസ്റ്റിറ്റ്യൂട്ട് ഓഫ് എൻസൈക്ലോപീഡിക് പബ്ലിക്കേഷൻസ്. TVM.
- ↑ "അമ്പാടിഇക്കാവമ്മ - Mathrubhumi Books". 2012-01-29. Archived from the original on 29 January 2012. பார்க்கப்பட்ட நாள் 2023-05-21.