அம்பிகாபதி-அமராவதி
அம்பிகாபதி-அமராவதி என்பது இராமாயணத்தைத் தமிழில் எழுதிப் புகழ்பெற்ற கம்பரின் மகனான அம்பிகாபதிக்கும், மூன்றாம் குலோத்துங்க சோழ மன்னனின் மகளான அமராவதிக்கும் இடையே மலர்ந்த காதலை அடிப்படையாகக்கொண்ட ஒரு துன்பியல் காதல் கதை. அம்பிகாபதி, அமராவதி காதல் அரசியல் சிக்கலாக உருவெடுத்தது. குலோத்துங்கனுக்கும், கம்பருக்கும் நடுவே இடைவெளியைத் தோற்றுவித்தது.
கதை
தொகுஎப்பொழுதும் அமராவதிமேல் மேல் நினைவாக இருக்கும் அம்பிகாபதிக்கு, சிற்றின்பச் சாயல் ஒரு துளியும் கலங்காமல் இறைவன் மீது நூறு பாடல்கள் ஒரே முறையில் தொடர்ந்து பாடி முடித்தால் அமராவதியை மணமுடிப்பது பற்றிச் சிந்திக்கலாம் என்ற குலோத்துங்கன் வாக்கிற்கிணக்க அம்பிகாபதி சிற்றின்பம் கலக்காமல் பாடல்கள் தொடர்ந்து பாடிக் கொண்டிருந்தான். மறைவில் இருந்த அமராவதி அம்பிகாபதி ஒவ்வொரு பாடல் பாடி முடித்ததும் எண்ணி வைக்கப்பட்டிருந்த நுாறு மலர்களில் ஒவ்வொரு மலராக எடுத்து வேறுபடுத்தி வைத்தாள். கலத்தில் இருந்த நூறாவது மலரும் தீர்ந்தது. அம்பிகாபதி நூறு பாடல்களை வெற்றிகரமாக பாடி முடித்தாயிற்று என்னும் மகிழ்ச்சியில் மறைவில் இருந்த அமராவதி எட்டிப் பார்த்து விடுகிறாள். அவள் முகத்தைப் பார்த்தவுடன் தன்னை மறந்த அம்பிகாபதி,
சற்றே பருத்த தனமே குலுங்கத் தரளவடம்
துற்றே அசையக் குழல்ஊச லாடத்துவர் கொள்செவ்வாய்
நல்தேன் ஒழுக நடனசிங்கார நடையழகின்
பொன்தோ் இருக்கத் தலையலங் காரம் பறப்பட்டதே.
என அமராவதியை வருணித்துப் பாடி விடுகின்றான். அம்பிகாபதி பாடிய காப்புச் செய்யுளையும் போட்டிச் செய்யுளுள் ஒன்றாகக் கொண்டு எண்ணிய அமராவதி 99 வது போட்டிச் செய்யுள் முடிந்தவுடனே 100-வது செய்யுள் முடிந்தது என நினைத்து எட்டிப் பார்த்தாள். சோழன் வைத்த சோதனையில் அம்பிகாபதி கடைசியில் மயிரிழையில் தோற்றதால் அம்பிகாபதியும், கம்பரையும் சோழ நாட்டிலேயே இருக்கக்கூடாது என்று கூறி நாட்டைவிட்டு வெளியேற மன்னன் உத்தரவிடுகின்றான்.
கம்பன் பாடிய தனிப்பாடல் ஒன்று அம்பிகாபதி வெட்டி வீழ்த்தப்பட்டான் என்று கூறுகிறது. [2] [3]
பரவலர் பண்பாட்டில்
தொகுஅம்பிகாபதி அமராவதி குறித்து தமிழ்லி திரைப்படம்ங்கள் ஆக்கபட்டுள்ளன அவை;
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்
தொகு- ↑ தனிப்பாடல் திரட்டு - அம்பிகாபதி பாடியவை - பாடல் 53 - பக்கம் 52
- ↑ தனிப்பாடல் திரட்டு, பக்கம் 51, கம்பர் பாடிய தனிப்பாடல் திரட்டு, பாடல் 46,
மட்டுப்படாக் கொங்கை மானார்கலவி மயக்கத்திலே
கட்டுப்பட்டா யென்ன காதல்பெற்றாய் மதன்கை யம்பினாற்
பட்டுப்பட்டா யினுந் தேறுவையே யென்றுபார்த் திருந்தேன்
வெட்டுப்பட்டாய் மகனே தலைநாளின் விதிப்படியே. (46), - ↑
(பாடல் விளக்கம்)
எல்லை மட்டுப்படாமல் பருத்திருக்கும்
கொங்கை கொண்ட மான் போன்றவள்
(அமராவதி)
கலவி மயக்கத்தில்
கட்டுப்பாட்டோடு இரு
என்று நான் கூறும் அளவுக்குக்
காதல் இன்பம் பெற்றாய்.
மன்மதன் கை அம்பில்
நீ பட்டும் படாமலும் இருந்தால்
நீ கடைத்தேறுவாய்
என்று பார்த்துக்கொண்டிருந்தேன்.
மகனே!
அம்பிகாபதியே!
நீ முதல் நாளிலேயே
உன் தலைவிதிப்படி
வெட்டுப்பட்டு மாண்டுபோனாயே.