அம்பிவலி குகைகள்

மகாராட்டிரத்தில் உள்ள குகைக் கோயில்

அம்பிவலி குகைகள் (ஆங்கிலம்: Ambivali Caves) அல்லது அம்பிவலி லெனி என்பது மஹாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள நேரல் (नेरळ ) அருகே உள்ள பௌத்த குகைகளின் தொகுப்பு ஆகும், இது கல்யாணுக்கு தென்கிழக்கே 8 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. [1] [2] குகைகள், ஓர் ஆற்றின் குழிவான பகுதியில் அமைந்துள்ள, தாழ்வான மலையில் வெட்டப்பட்டுள்ளன. [3] இங்கு தாழ்வாரம் மற்றும் பல நீர் தொட்டிகளுடன் கூடிய 12 விகாரை அறைகள் உள்ளன. தாழ்வார தூணில் பிராமி எழுத்துக்களில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்கள்

தொகு
  1. Brancaccio, Pia (2010). The Buddhist Caves at Aurangabad: Transformations in Art and Religion (in ஆங்கிலம்). BRILL. p. 33. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9004185259.
  2. Maharashtra State Gazetteers (in ஆங்கிலம்). Directorate of Government Print., Stationery and Publications, Maharashtra State. 1964. p. 709.
  3. Bulletin of the Deccan College Research Institute (in ஆங்கிலம்). Dr. A. M. Ghatage, director, Deccan College Postgraduate and Research Institute. 1982. p. 78.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பிவலி_குகைகள்&oldid=3416201" இலிருந்து மீள்விக்கப்பட்டது