அம்பேத்கர் சமாஜ் கட்சி
அரசியல் கட்சி
அம்பேத்கர் சமாஜ் கட்சி (அ.ச.க.; ஆங்கில மொழி: Ambedkar Samaj Party; அம்பேத்கர் சமூக கட்சி) இந்தியாவில் தலித்துகளின் உரிமைகளுக்காக போராடும் ஒரு அரசியல் கட்சியாகும். உயர் சாதி சிறுபான்மையினரை பிரதிநிதித்துவம் செய்வதாக கருதி இந்து தேசியவாதத்தை இந்த கட்சி எதிர்க்கிறது. பகுஜன் சமாஜ் கட்சி பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியின் மூலம் தலித் மக்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக அ.ச.க. கூறுகிறது. அ.ச.க.வின் தலைவர் தேஜ் சிங்.
தேஜ் சிங் , பகுஜன் ஸ்வயம் சேவக் சங்கதன் என்ற போராளி தலித் அமைப்பின் தலைமைத் தளபதியாகவும் உள்ளார். அ.ச.க. 1995 இல் நிறுவப்பட்டது.
2004 மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் இருந்து ஒன்பது வேட்பாளர்களை அ.ச.க. அறிவித்தது. தேஜ் சிங் அலிகரில் வேட்பாளராக நின்று 1,054 வாக்குகள் (0.17%) பெற்றார்.