அம்பேத்கர் ஜெயந்தி

அம்பேத்கர் ஜெயந்தி (Ambedkar Jayanti) ஒவ்வொரு ஆண்டும் பாரத் ரத்னா முனைவர் பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த நாளை நினைவு கூரும் விதமாக ஏப்ரல் 14ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. 1891ஆம் ஆண்டில் இதே நாளில்தான் பாபா சாகேப் பிறந்தார். அனைத்து இந்திய மாநில மற்றும் நடுவண் அரசு அலுவலகங்களுக்கு இது ஒரு பொது விடுமுறை நாளாகும். இந்நாளில் வழமையாக குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களாலும் புது தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கரது திரு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துவது வழமையாக உள்ளது. இதுநாள்வரை ஒடுக்கப்பட்டு அவரது வழிகாட்டுதலில் புத்த சமயம்|புத்த மதத்தைத் தழுவிய மக்கள் உலகெங்கும் இந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். இந்தியாவில் ஒவ்வொரு ஊரிலும் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் பெருந்திரளாக ஊர்வலம் சென்று தங்கள் ஊரில் நிறுவப்பட்டுள்ள அவரது திரு உருவச்சிலைக்கு மாலையிட்டு கொண்டாடுகின்றனர். அன்று முழுவதும் தாரை, தப்பட்டை முழக்கத்துடன் ஆடிப்பாடி மகிழ்கின்றனர். பல சமூக நிகழ்ச்சிகளும் பொதுக்கூட்டங்களும் நடத்தப்படுகின்றன. [1]

அம்பேத்கர் ஜெயந்தி
கடைபிடிப்போர்இந்தியா
வகைசமயச் சார்பில்லாத முனைவர். பி.ஆர். அம்பேத்கரின் பிறந்தநாள் ஆண்டுவிழா
நாள்ஏப்ரல் 14
தொடர்புடையனஅசோகர் விசய தசமி

சான்றுகள்

தொகு
  1. "அம்பேத்கர் ஜெயந்தி விழா". தினகரன். 1 மே 2012. பார்க்கப்பட்ட நாள் February 6, 2013.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பேத்கர்_ஜெயந்தி&oldid=3729782" இலிருந்து மீள்விக்கப்பட்டது