அம்மனூர் அகத்தீசுவரர் கோயில்

அமரம்பேடு அகத்தீசுவரர் கோயில் என்பது தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம், கச்சனத்துக்கு அருகில் உள்ள அம்மனூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அகத்தீசுவரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவாரூர்
அமைவிடம்:அம்மனூர், திருத்துறைப்பூண்டி வட்டம்
கோயில் தகவல்
மூலவர்:அகத்தீசுவரர்
தாயார்:அகிலாண்டேஸ்வரி
வரலாறு
கட்டிய நாள்:1975

வரலாறு

தொகு

1950 ஆம் ஆண்டு அம்மனூர் ஊர் மக்கள் ஒரு இடத்தில் குளம் வெட்டத் துவங்கினர். அங்கு ஒரு சிவலிங்கம் கிடைத்தது. அந்த லிங்கத்தை அருகில் இருந்த அரச மரத்தடியில் வைத்து சிறிய கோயில் ஒன்றை எழுப்பினர்.[2] பின்னர் விமானம், முன் மண்டபம், அகத்தீசுவரர் சந்நிதி, அகலாண்டேசுவரி சந்நிதி, மேற்கு நோக்கிவாறு சனிபகவான் சந்நிதி ஆகியவை அமைக்கபட்டன. இதன் பிறகு 1975 ஆம் ஆண்டு கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தபட்டது.[2] இதைத் தொடர்ந்து 2006 ஆம் ஆண்டும் குடமுழுக்கு நடத்தப்பட்டது.[2]

பூசைகள்

தொகு

குடமுழுக்கு ஆன நாளில் இருந்து ஒவ்வரு ஆண்டும் சம்வத்சரா அபிசேக வைபவத்தில் சிவனுக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிசேகமும், பூசைகளும் நடத்தப்படுகின்றன. பல்வேறு வாகனங்களில் சுவாமியும் அம்மனும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். 2015 ஆம் ஆண்டுமுதல் கோயிலில் ஊர் மக்களால் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பிரதோச நாட்களில் சிசப வாகனத்தில் அம்மையப்பர் வீதியுலா வருகின்றனர்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. அம்மனூர் அகத்தீஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்
  2. 2.0 2.1 2.2 2.3 "முன் ஜென்ம வினைகள் நீக்கும் அம்மனூர் அகத்தீஸ்வரர்". 2023-12-14. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)