அம்மன் கூத்து
அம்மன் கூத்து என்பது, அம்மனைப் போல் வேடம் புனைந்து ஆடுவதாலும், அம்மன் கோவில்களில் ஆடுவதாலும் அம்மன் கூத்து எனப் பெயர்பெற்றதோர் கூத்தாகும்.[1] இக்கூத்து கணியான் கூத்திற்கு, துணை ஆட்டமாகவும் கருதப்படுகிறது. இக்கூத்து பல மாவட்டங்களில் பெரிதும் விரும்பப்படுகிறது. இக்கலை, சடங்கு சார்ந்ததாகவும், அம்மனின் அருளைக் காட்டுவதாகவும் அமையும் ஒன்றாகும். அம்மன் கூத்து, இன்றும் நடைமுறையில் நிகழ்த்தப்படுவதாகும்.
நிகழ்த்துநர்
தொகு- பவுன்காரர்: கணியான் குழுவில் இருக்கும் ஒருவர் வேப்பிலையை இடுப்பில் அணிந்தும்,கையில் வைத்துக்கொண்டும், உடலில் நீறு பூசி, தார்பாய்ச்சு வேட்டிக் கட்டுடன், ஆவேசம் பொங்க அம்மன் கூத்தாடுவார். இவர் பவுன்காரர் என்று அழைக்கப்படுகிறார்.
- அண்ணாவி: அம்மன் கூத்தின்போது தலைமைக் கணியான் அம்மன் வழிபாட்டுப் பாடல்களையும், கும்மிப் பாடல்களையும் பாடுவார். இவர் அண்ணாவி எனப்படுகிறார்.
- பிற கலைஞர்கள்: பெண்வேடமணிந்த கணியான் கூத்து கலைஞர்களும், அருள்வந்து ஆடுபவர்களும் அம்மன் கூத்து ஆடுபவருடன் இணைந்து ஆடுவர்.
நன்றி: தினத்தந்தி, ஜனவரி 21, 2013
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள்". Archived from the original on 2012-01-11. பார்க்கப்பட்ட நாள் 2012-06-25.