அம்மன் சிலை (யமுனாரி)

அம்மன் சிலை (யமுனாரி), நல்லூரில், சங்கிலித்தோப்புப் பகுதியில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் கொண்ட யமுனாரிக் குளத்தை ஆழமாக்கும் முயற்சியின்போது கண்டெடுக்கப்பட்ட மரத்தாலான சிலை ஆகும். இது பிற்பட்ட காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.[1] யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஏதோவொரு கோயிலில் இருந்த இச்சிலையைப் போர்த்துக்கேயரிடம் இருந்து பாதுகாப்பதற்காக இக்குளத்தில் போட்டு மறைத்திருக்கலாம் அல்லது சேதமுற்றதால் வழிபாட்டுக்கு எற்றதல்ல என்னும் காரணத்தால் இக்குளத்தில் போட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இது இப்போது யாழ்ப்பாண அருங்காட்சியகத்தில் உள்ளது.

அமைப்பு தொகு

இலுப்பை மரத்தில் செய்யப்பட்டுள்ள இச்சிலை, மரப் பீடத்தில் நிற்கும் நிலையில் காணப்படுகிறது. நான்கு கைகளைக் கொண்ட இவ்வம்மன் சிலையின் பின்புறத்து வலது கையில் பாசம் அல்லது உருத்திராக்கமும், இடது கையில் தாமரை மொட்டும் காணப்படுகின்றன. முன் வலது கை அபயம் அளிக்கும் நிலையிலும் இடது கை வரத ஹஸ்தமாகவும் உள்ளன.[2]

மேற்கோள்கள் தொகு

  1. கிருஷ்ணராஜா, செல்லையா., 2015, பக். 160
  2. கிருஷ்ணராஜா, செல்லையா., 2015, பக். 160

உசாத்துணைகள் தொகு

  • கிருஷ்ணராஜா, செல்லையா., சிற்பக்கலைமரபுகள் மற்றும் குளங்களின் பெயர்களினூடாக அறியப்படும் நல்லூரின் பண்பாடு, சிங்கை ஆரம் பிரதேச மலர், நல்லூர்ப் பிரதேச செயலக கலாச்சாரப் பேரவை, நல்லூர், 2015. பக். 149-167.

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்மன்_சிலை_(யமுனாரி)&oldid=1922254" இலிருந்து மீள்விக்கப்பட்டது