அம்மா இலக்கிய விருது

அம்மா இலக்கிய விருது என்பது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்றாகும். 2016 ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது. மகளிர் இலக்கியங்களைப் படைப்பதில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தித் தொண்டாற்றி வரும் பெண் படைப்பாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் இந்த விருது அளிக்கப்படுகிறது. இந்த விருதுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், எட்டு கிராம் அளவிலான தங்கப்பதக்கமும், தகுதிச்சான்றும் அளித்துச் சிறப்பிக்கப்படுகின்றனர்.

விருது பெற்றவர்கள் பட்டியல்

தொகு
வரிசை எண் விருது பெற்றவர் பெயர் விருது வழங்கப்பட்ட ஆண்டு
1 ஹம்சா தனகோபால் 2016
2 முனைவர் மீ. சு. ஸ்ரீஇலட்சுமி[1] 2017
3 முனைவர் உலகநாயகி பழனிி 2018
4 திருமதி உமையாள் முத்து[2] 2019

மேற்கோள்கள்

தொகு
  1. "2016 மற்றும் 2017ம் ஆண்டுக்கான தமிழ்த்தாய், கபிலர் உ.வே.சா., கம்பர் விருது: முதல்வர் வழங்கினார்". www.dinakaran.com. Archived from the original on 2021-01-15. பார்க்கப்பட்ட நாள் 2021-03-05.
  2. "2019ம் ஆண்டிற்கான தமிழ் புத்தாண்டு விருது: தமிழக அரசு அறிவிப்பு". www.dinakaran.com. Archived from the original on 2022-03-16. பார்க்கப்பட்ட நாள் 2021-03-05.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்மா_இலக்கிய_விருது&oldid=3721623" இலிருந்து மீள்விக்கப்பட்டது