அம்மா வந்தாள் (புதினம்)

தி. ஜானகிராமனின் நூல்

அம்மா வந்தாள் (Amma Vandhaal) என்கிற தமிழ் நாவல் தி.ஜானகிராமன் (தி.ஜா.) அவர்களால் எழுதப்பெற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் 1966ல் வெளிவந்த ஒரு இலக்கிய படைப்பாகும். இந் நாவல் அவர் எழுதிய கதைகளுள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.[1] இது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு 1972ம் வருடம் வெளியிடப்பட்டது.[2]

அம்மா வந்தாள்
நூலாசிரியர்தி. ஜானகிராமன்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வெளியீட்டாளர்காலச்சுவடு
வெளியிடப்பட்ட நாள்
1966
ஊடக வகைஅச்சு
பக்கங்கள்100

கதை சுருக்கம்

தொகு

அப்பு வேதம் படிப்பதற்காக திருச்சிக்கு அனுப்பபடுகிறான். அங்கே பதினாறு வருடங்கள் வேதம் படித்தபின்னர் தன்னுடைய சொந்த ஊருக்குப் புறப்படத்தயாராகிறான். இன்னும் சில நாட்களில் கிளம்ப வேண்டும் என்ற நிலையில், அம்மடத்தினை நிர்வகிக்கும் பவானியம்மாளின் தம்பி மகள் இந்து தான் அப்புவை விரும்புவதாகக் கூறுகிறாள். இந்து ஏற்கனவே திருமணமாகி கணவனை இழந்தவள். தன் அத்தை பவானியம்மாளோடு வசிக்கிறாள். அவள் சிறுவயதிலிருந்தே அப்புவுடன் வளர்ந்தவள். அதனால் அவளுக்கு அப்புவின் மீது தீராக்காதல். தான் மணமாகி இருந்தாலும் அனைத்து நாட்களிலும் அப்புவையே நினைத்துக்கொண்டிருந்ததாக கூறுகிறாள். அப்பு அது பவானியம்மாவுக்கும், தன்னை நம்பி அனுப்பிய தன்னுடைய அம்மா அலங்காரத்திற்கும் செய்யும் துரோகம் எனக் கூறி மறுத்துவிடுகிறான். அதனால் கோபமடையும் இந்து, அப்புவிடம் அவனுடைய அம்மாவின் நடத்தை சரியில்லை எனவும், அவள் வேறொருவரோடு உறவு வைத்துள்ளதாகவும் கூறுகிறாள். அதனால் கோபமடையும் அப்பு பின்னர் சென்னைக்கு சென்றுவிடுகிறான். அங்கு அவனுடன் பிறந்தவர்கள் ஏழு பேர்.

பதினாறு வருடம் கழித்து வரும் அப்பு சில நாட்களிலேயே உண்மை அறிந்து கொள்கிறான். ஆம் இந்து கூறியது உண்மைதான். வீட்டிற்கு வரும் சிவசு பற்றி அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்திருக்கிறது. ஆனாலும் எல்லோரும் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள். அப்பா, அக்கா, அண்ணன், என எல்லோருக்கும் தெரிந்த உண்மை தனக்குத் தெரியாமல் போனதை உணர்கிறான். அதனால் மனமுடையும் அவன் மீண்டும் வேத சாலைக்கே திரும்புகிறான். இந்துவோடு சேர்கிறான். இதற்கிடையில் அப்புவின் மீது அளவிலா பாசம் வைத்திருக்கும் அவன் அம்மா அலங்காரம் அப்புவினைப் பிரியமுடியாமல் வேத சாலைக்கு வந்து அப்புவைப் பார்த்துவிட்டு காசிக்கு செல்கிறாள்.

முக்கிய கதாபாத்திரங்கள்

தொகு
  • அப்பு - வேத பாடசாலை மாணவன்
  • பவானி அம்மாள் - வேத பாடசாலை நிர்வாகி
  • இந்து - பவானி அம்மாளின் உறவினர்
  • அலங்காரம் - அப்புவின் அம்மா
  • தண்டபாணி - அப்புவின் அப்பா
  • சிவசு - பணக்கார நிலக்கிழார்

முகவுரை

தொகு

திரிலோகி நாத் மதன் என்பவர் ஒரு மனவலிமை மிக்க தாய்க்கும் மகனுக்கும் இடையே நடக்கும் மனப்போராட்டத்தை விவரிக்கும் நூலாக இக்கதை உள்ளதென கூறுகிறார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Ashokamitran (9 March 2008). "Janakiraman sends a wire". Times of India இம் மூலத்தில் இருந்து 12 மார்ச் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080312204504/http://www.hindu.com/mag/2008/03/09/stories/2008030950150400.htm. பார்த்த நாள்: 19 May 2014. "In 1966, he had written probably the most discussed novel, Amma Vandaal." 
  2. The Sins of Appu's Mother கூகுள் புத்தகங்களில்
  3. Triloki Nath Madan, Choice and Morality in Anthropological Perspective, p. 142, கூகுள் புத்தகங்களில்

வெளி இணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்மா_வந்தாள்_(புதினம்)&oldid=3260669" இலிருந்து மீள்விக்கப்பட்டது