அம்மை (நூல்வனப்பு)
அம்மை என்பது நூலின் வனப்பு இயல்புகள் எட்டில் ஒன்று. அம்மை வனப்பியல் நூலானது சில மெல்லிய சொற்களைக் கொண்டிருக்கும்.[1] அம்மை என்பது குணப்பெயர். அது அமைதிப்பாட்டு [2] நின்றமையின் 'அம்மை' என்று ஆயிற்று என்பது பேராசிரியர் இதற்குத் தரும் விளக்கம். திருக்குறள் அம்மை-வனப்பு கொண்ட நூல் எனத் தொல்காப்பிய உரையாசிரியர்கள் காட்டுகின்றனர்.
- அம்மை வனப்பு
- அறிவினான் ஆகுவ(து) உண்டோ பிறிதின்நோய்
- தன்நோய்போல் போற்றாக் கடை - திருக்குறள்