அம்ரோகா கொலை வழக்கு

அம்ரோகா கொலை வழக்கு (Amroha murder case) இந்தியாவிலுள்ள உத்தரபிரதேச மாநிலத்தின் அம்ரோகா நகரைச் சேர்ந்த சப்னம் என்ற பெண் 2008-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் காதலருடன் சேர்ந்து தனது குடும்ப உறுப்பினர்கள் 7 பேரை கொடூரமாக கொலை செய்ததை தொடர்ந்த நடைபெற்ற ஒரு வழக்காகும். ஆறு பேரை மயக்கமூட்டி பின்னர் வெட்டிக் கொன்றார்; ஏழாவது பலியான பத்து மாத குழந்தைக்கு மயக்கமூட்டாமலும் இவர்கள் கொலை செய்தனர்.[1][2] இந்த வழக்கில் சப்னம் மற்றும் சலீம் இருவருக்கும் மாவட்ட நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை அலகாபாத் நீதிமன்றம் 2010-ஆம் ஆண்டும், உச்சநீதிமன்றம் 2015-ஆம் ஆண்டும் உறுதி செய்தன. சப்னம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது.

அம்ரோகா கொலை வழக்கு
Amroha murder case
இடம்அம்ரோகா உத்தரப் பிரதேசம், இந்தியா.
நாள்ஏப்ரல் 14, 2008; 15 ஆண்டுகள் முன்னர் (2008-04-14)
தாக்குதல்
வகை
குடும்பக்கொலை,
இறப்பு(கள்)7
தாக்கியோர்சப்னம் மற்றும் சலீம்

தூக்கு தண்டனை தொகு

2021 ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஊடக அறிக்கைகள் சுதந்திர இந்தியாவில் தூக்கிலிடப்பட்ட முதல் பெண்மணியாக சப்னம் இருப்பார் என்று கூறின.[3] உத்தரபிரதேச ஆளுநரும், குடியரசுத் தலைவரும் சப்னமின் கருணை மனுவை நிராகரித்தனர். சப்னமின் 12 வயது மகன் முகமது தாச்சு, அவரது தண்டனையை ரத்து செய்யுமாறு இந்திய குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.[4][5]

பாதிக்கப்பட்டவர்கள் தொகு

பெயர் உறவுமுறை வயது
சௌகத் அலி தந்தை 55
ஆசுமி தாய் 50
அனீசு அண்ணன் 35
அஞ்சும் அண்ணி 25
இரசீத்து தம்பி 22
இரபியா உறவினர் 14
ஆர்சு மருமகன் 10 மாதம்

மேற்கோள்கள் தொகு

  1. Vishnu, Uma (2015-06-07). "Shabnam & Saleem: The relationship that claimed seven lives of a family". The Indian Express (in ஆங்கிலம்). Archived from the original on 2015-06-09. பார்க்கப்பட்ட நாள் 2021-02-18.
  2. "Amroha killings: Finality of death penalty important, says SC". Tribune India (in ஆங்கிலம்). 23 January 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-02-18.{{cite web}}: CS1 maint: url-status (link)
  3. "சுதந்திர இந்தியாவில் பெண்ணுக்கு முதல் தூக்கு தண்டனை: ஷப்னம் செய்தது என்ன?". BBC News தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2022-05-21.
  4. Sachdev, Geetika (20 February 2021). "Shabnam Ali: The First Woman To Be Hanged In Independent India". in.makers.yahoo.com (in Indian English). Archived from the original on 2021-02-20. பார்க்கப்பட்ட நாள் 2021-02-20.
  5. "Shabnam, First woman to be hanged after India's Independence: Know More". Pragativadi (in ஆங்கிலம்). 2021-02-18. பார்க்கப்பட்ட நாள் 2021-02-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்ரோகா_கொலை_வழக்கு&oldid=3931092" இலிருந்து மீள்விக்கப்பட்டது