அரக்கல் அருங்காட்சியகம்

அரக்கல் அரச குடும்ப அருங்காட்சியகம்

அரக்கல் அருங்காட்சியகம் (Arakkal Museum) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் இருந்த ஒரே முஸ்லிம் அரச குடும்பமான அரக்கல் அலி மன்னர் குடும்பத்தின் அரண்மனையில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகமாகும் . இந்த அருங்காட்சியகமானது அரக்கல்கெட்டு (அரக்கல் ராயல் பேலஸ்) என்று அழைக்கப்படும் அரண்மனையில் செயல்பட்டு வருகிறது. அரண்மனையின் தர்பார் ஹால் பகுதி கேரள அரசால் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் ரூ.9,000,000 செலவில் புதுப்பித்தல் மேற்கொள்ளப்பட்ட பின்னர், 2005 சூலையில் நாளன்று பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்து வைக்கப்பட்டது. [1]

அரக்கல் அருங்காட்சியகம்
அருங்காட்சியக முகப்பு
Map
நிறுவப்பட்டதுசூலை 1, 2005 (2005-07-01)
ஆள்கூற்று11°51′34″N 75°22′32″E / 11.859505°N 75.3755041°E / 11.859505; 75.3755041
வகைஅருங்காட்சியகம்
வருனர்களின் எண்ணிக்கை131,56 (2015)
உரிமையாளர்ஆரக்கல் ராயல் டிரஸ்ட்
அருகில் உள்ள தானுந்து நிறுத்துமிடம்Onsite(free)

அரசாங்கத்தால் புதுப்பிக்கப்பட்டாலும், அரக்கல்கெட்டு இன்னும் அரக்கல் ராயல் டிரஸ்டுக்கு சொந்தமாக அமைந்துள்ளது. மேலும் இது இன்னும் நாட்டின் தொல்பொருள் துறையான இந்திய தொல்பொருள் ஆய்வகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் வரவில்லை. மலபார் வரலாற்றில் முக்கிய பங்கு வகித்த அரக்கால் குடும்பத்தின் பாரம்பரியத்தை பாதுகாப்பதில் அரசாங்கம் மிகுந்த அக்கறை காட்டியது. அருங்காட்சியகத்திற்கு பார்வையிட வருகின்ற பார்வையாளர்களிடமிருந்து அரக்கல் ராயல் அறக்கட்டளையால் பெயரளவு நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அமைவிடம் தொகு

அரக்கல் அருங்காட்சியகம் கேரளத்தில் கண்ணூர் நகரத்திற்கு அடுத்ததாக உள்ள அயிக்கரா என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இது கண்ணூர் நகரிலிருந்து 2 முதல் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

சிறப்பு தொகு

பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளவாறே அரக்கல் அருங்காட்சியகம் அரக்கல் அரச குடும்பத்தைப் பற்றிய அனைத்தையும் கொண்டுள்ளதாக அமைந்துள்ளது. அரக்கல் குடும்பம் கேரள மாநிலத்தின் ஒரே ஒரு முஸ்லீம் அரச குடும்பமாகும். இந்த அரக்கால் குடும்பத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர் ஒரு பெண்மணி ஆவார். ஓர் அரசியாகக் கருதப்படும் இவர் அரக்கால் பீவி என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார். அரசன் அலி ராஜா என்று அழைக்கப்படுகிறார். அரக்கால் குடும்பத்தோடு தொடர்புடைய பல கதைகள் காலங்காலமாகக் கூறப்பட்டு வருகின்றன. இவ்வாறாகக் கூறப்படுகின்ற கதைகளில் ஒன்று முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இக்கதை உள்ளூர் மக்களை அதிகமாக கவர்ந்துள்ளது. அலி, சிராக்கல் மன்னன் மகளைக் காப்பாற்றியதாகவும், அதற்கு ஈடு செய்யும் விதமாக அந்த ஏழைப் பணியாளருக்கு மணம் செய்து வைத்ததாகவும் கூறப்படுகிறது. அந்த திருமணத்தை சிறப்பான முறையில் உள்ளூர் பாரம்பரிய முறைப்படி அவர் நடத்தி வைத்ததாகக் கூறப்படுகிறது. அரண்மனையின் தர்பார் மண்டபத்தில்தான் அருங்காட்சியகம் இயங்கி வருகிறது. மன்னர்களுக்குரிய பல கலைப்பொருள்கள் அங்கு காட்சியில் உள்ளன. அவற்றுள் அரக்கல் குடும்ப முத்திரை, அரக்கல் குடும்ப தளவாடங்கள், போரின்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், சமையல் அறையில் பயன்படுத்தப்பட்ட சமைப்பதற்குத் தேவையான சமையல் பொருள்கள் உள்ளிட்டவை காணப்படுகின்றன. அரக்கால் அரண்மனையால் பயன்படுத்தப்பட்டு வந்த தொலைபேசி மற்றும் தொலைநோக்கி ஆகிய பொருள்களும் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அருங்காட்சியகத்தின் வெளியே இருந்து பார்க்கும்போது அவ்வளவு அழகாக அது காணப்படவில்லை. ஆனால் அந்த அருங்காட்சியகத்திற்கு உள்ளே நுழைந்ததும் கடந்து சென்ற காலத்தை அங்குள்ள காட்சிப்பொருள்களில் காண முடியும். [2]

பார்வையாளர் நேரம் தொகு

அரக்கல் அருங்காட்சியகத்திற்கு திங்கட்கிழமை விடுமுறை நாளாகும். பிற நாள்களில் பார்வையாளர்கள் அருங்காட்சியகத்தை காலை 10.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை பார்வையிடலாம். அருங்காட்சியத்தைப் பார்வையிட பார்வையாளர் கட்டணமாக குறைந்த அளவிலான தொகை வசூலிக்கப்படுகிறது. [2] அருங்காட்சியக முகவரி அயிக்கரா, தவக்கரா, கண்ணூர், கேரளம் 670013 என்பதாகும்.

துறைகள் தொகு

  1. செயல்பாடுகள்
  2. ஆய்வு மற்றும் மேம்பாடு
  3. தகவல்தொடர்புகள் மற்றும் பொது தகவல்கள்
  4. நெறிமுறை மற்றும் தொடர்பு சேவை
  5. பதிவு மற்றும் அனுமதிகள்

படக்காட்சியகம் தொகு

வெளி இணைப்புகள் தொகு

குறிப்புகள் தொகு