அரங்கநாதர் பாரதம்

அரங்கநாதர் பாரதம் என்பது வில்லி பாரதத்தின் துணைநூல். இதை இயற்றியவர் அரங்கநாதக் கவிராயர். இவர் வில்லிபுத்தூர் ஆழ்வார் பாடாமல் விடுத்த வியாசபாரதத்தின் சௌப்திக பருவத்தின் பின் பகுதியில் அமைந்த சிகாமணிச் சருக்கம் முதல் சொர்க்காரோகணப் பருவம் வரை மீதமுள்ள பாடல்களைப் பாடிப் பாரதக்கதையை முடித்து உள்ளார்.[1]இதில் 2477 பாடல்கள் உள்ளன. எனவே இதைத் தனிநூலாகக் கருதாது வில்லிபாரதத்தின் துணை நூலாகவே கருதுவர்.

மேற்கோள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரங்கநாதர்_பாரதம்&oldid=1987902" இலிருந்து மீள்விக்கப்பட்டது