அரங்கம் (இதழ்)
அரங்கம்
தொகுநாடக அரங்கக் கல்லூரி வெளியீடு ஈழத்தில் 1978 இல் தோற்றம் பெற்ற நாடக அரங்க கல்லூரியின் சஞ்சிகையான அரங்கம் இருமாத இதழ் 1981 இல் வெளிவந்தது. வேண்டியவாறு வேண்டிய விளைக்கும் வேட்கையில் வீறுடின் முயல்வோம் என்ற மஹாகவியின் கவிவரியை மேற்கோளாக கொண்டு வந்த இதழின் ஆசிரியர் வீ. எம். குகராஜா. துணை ஆசிரியர் எஸ். ரி. குமார். அரங்கியலுக்கென்றே தனித்துவமாக வந்த இதழில் நாடக வரலாறு, நாடக விமர்சனம், நடிகர் அறிமுகம், நாடக நிகழ்வுகள் என்று பல கட்டுரைகளையும் பகுதிகளையும் உள்ளடக்கியதாக உள்ளது. 80களில் யாழ்ப்பாணத்தில் நாடகத்துறையின் வளர்ச்சி பற்றி நோக்குவோருக்கு இந்த சஞ்சிகை முக்கிய ஆவணமாக அமைந்துள்ளது.
வெளி இணைப்புகள்
தொகு- அரங்கம் தை மாசி 1981 பரணிடப்பட்டது 2019-05-24 at the வந்தவழி இயந்திரம்
- அரங்கம் வைகாசி- ஆனி 1981 மூன்றாவது இதழ் பரணிடப்பட்டது 2019-05-24 at the வந்தவழி இயந்திரம்
- அரங்கம் ஐப்பசி - கார்த்திகை 1981 நான்காவது இதழ் பரணிடப்பட்டது 2019-05-24 at the வந்தவழி இயந்திரம்
- http://அரங்கம் 1982 ஐந்தாவது இதழ் பரணிடப்பட்டது 2019-05-24 at the வந்தவழி இயந்திரம்