அரங்க. இராமலிங்கம்
அரங்க. இராமலிங்கம் (Aranga Ramalingam) (பிறப்பு: 15 அக்டோபர் 1953) தமிழக எழுத்தாளரும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் மேனாள் தமிழ் மொழித்துறைத் தலைவரும் ஆவார்.
பேராசிரியர் அரங்க.இராமலிங்கம் | |
---|---|
பிறப்பு | அக்டோபர் 15, 1953 தியாகதுருகம், கள்ளக்குறிச்சி மாவட்டம் & வட்டம் , தமிழ்நாடு |
இருப்பிடம் | இராயப்பேட்டை, சென்னை. |
தேசியம் | இந்தியர் |
கல்வி | முதுகலை, எம்ஃபில்., முனைவர் |
பணி | தமிழ்ப்பேராசிரியர் |
அறியப்படுவது | ஆய்வறிஞர், சொற்பொழிவாளர், |
பெற்றோர் | புலவர் ப.அரங்கநாதன், பழனியம்மாள் |
வாழ்க்கைத் துணை | இராம.வாசுகி |
பிள்ளைகள் | இராம. நரசிம்மன், இராம. குமரன், |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுஅரங்க இராமலிங்கம் சென்னை, இராயப்பேட்டையை வாழ்விடமாகவும், கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தைப் பிறப்பிடமாகவும் கொண்டவர். இளங்கலை (தமிழ்) 1974 பச்சையப்பன் கல்லூரியிலும், முதுகலை தமிழ் 1976 பச்சையப்பன் கல்லூரியிலும், எம்.பிஃல் தமிழ் 1977 தமிழ்த்துறை, சென்னைப் பல்கலைக்கழகத்திலும், 1983 இல் “சங்க இலக்கியத்தில் வேந்தர்” எனும் தலைப்பில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தினையும் பெற்றவர்.
பணி
தொகு- விரிவுரையாளர், 1984-1992 தொலைதூரக் கல்வி நிறுவனம், சென்னைப் பல்கலைக்கழகம்.
- இணைப் பேரசிரியர், 1992-1997 தொலைதூரக் கல்வி நிறுவனம், சென்னைப் பல்கலைக்கழகம்.
- இயக்குநர், பதிப்புத் துறை, 2005-2008 சென்னைப் பல்கலைக்கழகம்.
- பேராசிரியர், 1997 தொலைதூரக் கல்வி நிறுவனம், சென்னைப் பல்கலைக்கழகம்.
- பேராசிரியர், 2010-2012 தமிழ் மொழித்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்.
- பேராசிரியர் & தலைவர், 2011-2014 தமிழ் மொழித்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்.
ஆசிரியப் பணி
தொகு- 30 பேர் முனைவர்பட்டத்தினை நிறைவு செய்துள்ளனர்.
- 30 பேர் இளமுனைவர்பட்டம் நிறைவு செய்துள்ளனர்.
- ஆய்வு மாநாடுகள் - 60, கருத்தரங்குகள் - 30, பட்டறை வகுப்புகள் -10 உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் சிறப்புச் சொற்பொழிவாளராகப் பங்கேற்றுள்ளார்.
எழுதிய நூல்கள்
தொகு- விடுதி மலர்கள் (பதிப்பாசிரியர்) 1975
- பாரதிதாசன் படைப்புகளில் நகைச்சுவை 1978
- சங்க இலக்கியத்தில் வேந்தர் 1987
- வெஞ்சினமும் வஞ்சினமும் 1992
- பௌத்தம் போற்றிய பெண் தெய்வங்கள் 1992
- திருள்ளுவர் இறைநெறி 1994
- தாடகை 1996
- புரட்சிக் கவிஞரும் பொதுவுடைமையும் 1998
- திருக்குறளில் சித்தர் நெறி 1997
- அறிவே ஜோதி 1998
- திருவடி 2003
- ஒழுக்கம் 2003
- சித்தர் நோக்கில் சைவநெறி 2003
- திருஞானசம்பந்தரின் ஆளுமைத்திறன் 2003
- முருக பக்தி 2004
- தெய்வச் சேக்கிழார் 2005
- வ.உ.சி. கண்ட மெய்ப்பொருள் 2006
- சித்தர் இறைநெறி 2007
- திருத்தொண்டர் வரலாறு 2007
- பயன்பாட்டுத் தமிழ் 2008
- தெய்வப்புலவரின் திருவாய்மொழி[1] 2008
- மெய்ப்பொருள் 2008
- திருவாசக ஆய்வு மாலை (பதிப்பாசிரியர்) 2008
- கவிஞர் நெஞ்சில் அரங்கநாதர் (பதிப்பாசிரியர்) 2004
- சித்தர் இரகசியம் 2011
- மாணிக்கவாசகர் 2011
- சிவபுராணம் - உரை 2012
- சித்தர் குறியிட்டுச் சொற்கள் 2012
- நினைக்கத் தனக்கு 2014
- சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சுடர்கள் (பதிப்பாசிரியர்) 2014
- திருமந்திரம் 2015
- ஒருங்கிணைந்த வடார்க்காடு மாவட்ட ஊர்ப்பெயராய்வு 2017
- மாணவர்களுக்கான திருக்குறள் 2017
- தியாகதுருகம் 2017
- திருமந்திரத்தின் பெருமை (தொகுப்பு மற்றும் பதிப்பாசிரியர்) 2017
- பெரியபுராணம் சில் சிந்தனைகள் 2019
- சித்தர்வழி[2] 2019
- திருக்குறள் கவினுரை 2021
- தமிழர் நாகரிகமும் தமிழ்மொழி வரலாறும் (10 தொகுதிகள்) 2021
- திருக்குறள் களஞ்சியம் (10 தொகுதிகள்) 2022
- திருக்குறள் - எளிய உரை 2022
- கற்பின் கனலி 2022
- மரணமிலாப் பெருவாழ்வு
- பாரதியார்
- புத்தர்
- The Way of Siddhas (English) 2004
- புத்தொளிப் பயிற்சி (பதிப்பாசிரியர்) 2009
- சித்தர் வழி (அறிமுகம்) 2011
- பெரியபுராணம்
- வான்கலந்த மணிவாசகர்
- சொல்லலாமா....!
- திருமந்திரச் சொற்பொழிவுகள்
- திருக்குறள் கட்டுரைகள்
- திருவள்ளுவர் இறைநெறி
சொற்பொழிவு
தொகுஆன்மிகச் சொற்பொழிவு - 108 வாரம் தொடர் சொற்பொழிவு (பத்து முறை) (பெரியபுராணம், திருவாசகம், திருமந்திரம், தேவாரம், சித்தர் இலக்கியம்)
வெளிநாட்டுப் பயணங்கள்
தொகுமலேசியா, சிங்கப்பூர், இலங்கை, இந்தோனிசியா, சுவட்சர்லாந்து, மொரிசீயசு, கனடா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்று சொற்பொழிகள் ஆற்றியுள்ளார்.
விருதுகளும் கௌரவங்களும்
தொகு- பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் விருது 2000
- திருமந்திரத் தமிழ் மாமணி 2001
- வள்ளல் பாண்டித்துரை தேவர் விருது 2002
- சித்தர்சீர் பரவுவார் 2002
- இலக்கியச் செம்மல்
- திருத்தொண்டர் மாமணி 2003
- தமிழ்வாகைச் செம்மல் 2004
- மன்னர் பாஸ்கர சேதுபதி விருது 2004
- வைணவச் சுடர் 2005
- தமிழ்ப் பேரொளி 2005
- திருவருள் இயற்றமிழ் புலவர் 2006
- மெய்ந்நெறி வித்தகர் 2007
- ஆன்மிகச் சுடர் 2008
- நல்லாசிரியர் விருது 2008
- ஞான வேள்வி நாயகம் 2009
- இலங்கை அரசின் தமிழ் சாகித்திய விருது 2010
- அறநெறிச் செம்மல் 2010
- பேராசிரியர் அ.சா. ஞானசம்பந்தனார் நல்லாசிரியர் விருது 2011
- சென்னைப் பல்கலைக்கழகத்தின் கல்விப்புலச் சாதனை விருது 2012
- சிவஞானச் செம்மல் திருவாவடுதுறை ஆதீனம் 2015
- தமிழ்ச்சுடர் விருது 2015
- மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை விருது 2015
- பெரிய புராணப் பேருரை மாமணி விருது தெய்வச் சேக்கிழார் மன்றம் - குன்றத்தூர் 2015
- டாக்டர் இராஜா சர்.அண்ணாமலை செட்டியார் பிறந்தநாள் நினைவு விருது 2016
- இலங்கை அரசின் சாகித்திய அகாதெமி விருது 2016
- செஞ்சொற்கொண்டல் விருது 2017
- செந்தமிழ்ச் சுடர் விருது 2017
- தேமொழியார் விருது 2017
- சொற்கோ விருது 2017
- முனைவர் மு.வ. தமிழ்ச் சான்றோர் விருது 2018
- தமிழ்ச் செல்வம் விருது 2018
- சித்தர் ஆய்வுச் செம்மல் 2018
- தமிழக அரசின் இலக்கிய மாமணி விருது 2022
- பாரதி விருது 2023
- சென்னை கம்பன் கழகம் வழங்கிய கம்பர் விருது 2024
மேற்கோள்கள்
தொகு- ↑ "தெய்வப் புலவரின் திருவாய் மொழி-அரங்க ராமலிங்கம்". தினமணி. https://www.dinamani.com/specials/nool-aragam/2019/jun/17/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF---%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3172725.html. பார்த்த நாள்: 30 December 2023.
- ↑ இராமலிங்கம், அரங்க (2004), சித்தர் வழி, சிவகுரு பதிப்பகம், பார்க்கப்பட்ட நாள் 2023-12-30
உசாத்துணை நூல்கள்
தொகு- முனைவர் வெ. இராம்ராஜ், ‘அனுபவக் களஞ்சியம் (பேராசிரியர் அரங்க. இராமலிங்கனார்)’, டுடே பப்ளிகேஷன்ஸ், சென்னை. சனவரி - 2021.
- முனைவர் க. மங்கையர்க்கரசி, ‘அரங்க இராமலிங்கம்’, கலைஞன் பதிப்பகம், சென்னை. முதற்பதிப்பு - 2015