அரசினர் மேல்நிலைப் பள்ளி, அலங்கானூர்

அரசினர் மேல்நிலைப்பள்ளி, அலங்கானூர் என்பது இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், அலங்கானூர் ஊராட்சிக்கு உட்பட்ட அலங்கானூர் கிராமத்தில் உள்ள ஒரு அரசினர் மேல்நிலைப்பள்ளியாகும். பரமக்குடி கல்வி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இப்பள்ளிக்கான முதன்மைக்கல்வி அலுவலகம் இராமநாதபுரத்திலும், மாவட்டக்கல்வி அலுவலகம் பரமக்குடியிலும் உள்ளது.[1] 2015 ஆம் ஆண்டு நடந்த பன்னிரெண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்தலில் நூறுசதவீத தேர்ச்சி பெற்ற பத்து இராமநாதபுர மாவட்ட அரசுப்பள்ளிகளில் இப்பள்ளியும் ஒன்று.[2]

அமைவிடம்

தொகு

பரமக்குடி பேருந்து நிலையத்திலிருந்து 20 கி.மீட்டர் தொலைவிலும், முதுகுளத்துாா் பேருந்து நிலையத்திலிருந்து சுமாா் 15 கி.மீ தொலைவிலும் இப்பள்ளி அமைந்துள்ளது. பள்ளியானது கீழத்துாவல் காவல் நிலையத்திற்கு உட்பட்டதாகும்.

வரலாறு

தொகு

இப்பள்ளியில், 1963ஆம் ஆண்டில் அரசினர் உயர்நிலைப்பள்ளியாக முதன் முதலில் தொடங்கப்பட்டது. 2006ல் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பள்ளியின் இடம் சுமாா் 5 ஏக்கா் இடப்பரப்பளவு ஆகும். இதில் கட்டிடம் இட அமைவானது இரண்டு ஏக்காிலும், விளையாட்டு மைதானம் மூன்று ஏக்காிலும் உள்ளது.

பாடப் பிரிவுகள்

தொகு

பள்ளியில் உயர்நிலையில் 6 முதல் 10ம் வகுப்பும் மேல்நிலையில் 11மற்றும் 12ம் வகுப்பில் கணிதம் மற்றும் உயிரியல் பாடமும், கணினி மற்றும் உயிாியல் பாடம் என இரண்டு பிாிவுகள் உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. "Alanganur Village". wikimapia. பார்க்கப்பட்ட நாள் 20 நவம்பர் 2015.
  2. http://www.dailythanthi.com/News/Districts/Ramanathapuram/2015/05/12030330/100-percent-of-the-qualified-state-school-head-teachers.vpf

வெளியிணைப்புகள்

தொகு