அரசு அருங்காட்சியகம், கடலூர்

இந்தியாவின் தமிழ்நாடு, கடலூர் மாவட்டம், மஞ்ச குப்பத்தில், அரசு அருங்காட்சியகம் 1989 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த அருங்காட்சியக சேகரிப்பில் மாவட்டத்தின் வரலாறு, கலாச்சாரம், தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் குறித்த பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இயற்கை வரலாற்று மாதிரிகளில் தென்னிந்திய மரங்கள், இழைகள், அன்னம், கரடி, பல்லி மற்றும் பாம்புகள் அடங்கும். மர புதைபடிமங்கள் மற்றும் அம்மோனைட் புதைபடிமங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

சொற்பொழிவுகள், கண்காட்சிகள் மற்றும் பயிற்சித் திட்டங்கள் மூலம் ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவை வழங்குவது இந்த அருங்காட்சியகத்தின் கல்வி சார்ந்த நடவடிக்கைகளில் ஒன்றாக உள்ளது.[1]

அருங்காட்சியகத்தில் ஓர் சிற்பத் தோட்டம் பார்வையாளர்களை வரவேற்கிறது. இந்த சிற்பத் தோட்டத்தில் சிவலிங்கம், நந்தி, விஷ்ணு, குரங்கு சிற்பங்கள், நரசிம்மா, சூர்யா மற்றும் சண்டிகேசுவரர் சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கண்ணாடி இழையில் செய்யப்பட்ட தமிழ் எழுத்து, டைனோசர் மாதிரி மற்றும் காளி சிலை அருங்காட்சியகத்தின் நுழைவாயிலில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

சுப்ரமண்யா, சூர்யா, நவநீத கிருஷ்ணன், தட்சிணாமூர்த்தி, பைரவா, வீரபத்திரா, மற்றும் சப்த கன்னிகள் கற்சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள சிறப்புமிகு சிற்பங்கள் ஆகும். விநாயகர், விஷ்ணு, நடராஜர், சோமசுகந்தர், கிருஷ்ணர் ஆகியோரின் வெண்கல படங்கள் வெண்கல காட்சிக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ளன.

முதல் தளத்தில் காட்டு நாயக்கன் பழங்குடி பொருட்கள், கற்கால கருவிகள், இசைக்கருவிகள், கல்வராய மலைவாழ் பழங்குடியினரின் விவசாய கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

முகவரி

தொகு

அரசு அருங்காட்சியகம், 19 மருத்துவமனை சாலை கடலூர் - 607 001

மேற்கோள்கள்

தொகு
  1. "Cuddalore". govtmuseumchennai.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-17.

வெளி இணைப்புகள்

தொகு