அரசு இரயில்வே காவல்படை

அரசு இரயில்வே காவல்படை (Government Railway Police), இதனை சுருக்கமாக GRP என அழைப்பர். இதன் முதன்மைப் பணி தொடருந்து நிலையங்களில் சட்டம் & ஒழுங்கை நிலைநாட்டல், இந்திய இரயில்வேயின் சொத்துக்களை காக்க ரோந்துப் பணியில் ஈடுபடுதல் ஆகும்.

இரயில்வே காவல்படை
இந்திய அரசின் சின்னம்
இந்திய அரசின் சின்னம்
சுருக்கம்GRP
துறையின் கண்ணோட்டம்
உருவாக்கம்1881
சட்ட ஆளுமைஅரசு முகமை
அதிகார வரம்பு அமைப்பு
செயல்பாட்டு அதிகார வரம்புஇந்தியா
சட்ட அதிகார வரம்புதொடர்புடைய மாநிலங்கள் & ஒன்றியப் பகுதிகள்
Primary governing bodyதொடர்புடைய மாநில அரசுகள்
Secondary governing bodyஇந்திய இரயில்வே அமைச்சகம்
Constituting instrument
  • இந்திய இரயில்வே சட்டம், 1989
செயல்பாட்டு அமைப்பு
அமைச்சர்
  • மாநில/ஒன்றியப் பகுதிகளின் காவல்துறை அமைச்சர்கள்
துறை நிருவாகி
  • காவல் துறையின் கூடுதல் தலைமை இயக்குநர் (இரயில்வே)
அமைச்சுமாநில/ஒன்றியப் பகுதிகளின் காவல்துறை
[1]

இரயில்வே பாதுகாப்புப் படை இந்திய இரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. ஆனால் அரசு இரயில்வே காவல்துறை தொடர்புடைய மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதி அரசுகளின் உள்துறையின் கீழ் செயல்படுகிறது.இரயில்வே பாதுகாப்புப் படைகள் கண்டுபிடிக்கும் குற்றச் செயல்களின் வழக்கை, அரசு இரயில்வே காவல்துறையானது மேல் விசாரணை மேற்கொள்ளும். [2][3]

அதிகாரம்

தொகு

தொடர்புடைய மாநிலங்கள் & ஒன்றியப் பகுதிகளின் அரசின் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநரின் தலைமையின் கீழ் அரசு இரயில்வே காவல்துறை செயல்படுகிறது. இதன் பணிகளுக்கு மாநில/ஒன்றிய காவல்துறையிலிருந்து அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பணி அமர்த்தப்படுகின்றனர்.

பங்கு

தொகு

இந்தியாவில் உள்ள தொடருந்து நிலையங்களில் மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதுடன், சட்டம் மற்றும் ஒழுங்கைக் காப்பதே அரசு இரயில்வே காவல்துறையின் (GRP) முதன்மைப் பணியாகும். மேலும் தொடருந்து நிலைய வளாகத்தில் நடக்கும் குற்றங்களை விசாரிக்கின்றனர். இரயில்வே அதிகாரிகள் மற்றும் இரயில்வே பாதுகாப்புப் படைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு இரயில்வே காவல்துறை (GRP) செய்கிறது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. Website
  2. Press Trust of India. "MoS Railways dubs Railway Protection Force as 'toothless', demands more power for it". economictimes.indiatimes.com. https://economictimes.indiatimes.com/industry/transportation/railways/mos-railways-dubs-railway-protection-force-as-toothless-demands-more-power-for-it/articleshow/67560323.cms. 
  3. Bibek Debroy. "Lesser-known facts about GRP and RPF". Business Standard. https://www.business-standard.com/article/opinion/lesser-known-facts-about-grp-and-rpf-117061501484_1.html. 
  4. "Role of the GRP". indianrailways.gov.in. South Western Railway. பார்க்கப்பட்ட நாள் 12 June 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரசு_இரயில்வே_காவல்படை&oldid=4047563" இலிருந்து மீள்விக்கப்பட்டது