அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி
ஒரத்தநாடு அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் என்பது தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம் நடுவூரில் உள்ள ஒரு அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி ஆகும்.[1] இக்கல்லூரியானது 2012 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இக்கல்லூரி ஒரத்தநாடு மாவட்ட கால்நடை பண்ணை வளாகத்தில் 177.92 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரியில் ஏழு துறைகள் உள்ளன. மேலும் இங்கு மாணவர் விடுதி, கால்நடை சிகிச்சை வளாகம், காலநடைப் பண்ணை வளாகம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "கால்நடை மருத்துவப் படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு". செய்தி. தினமணி. 21 மே 2018. பார்க்கப்பட்ட நாள் 11 மே 2019.
- ↑ "ஒரத்தநாட்டில் கால்நடை மருத்துவக் கல்லூரி: முதல்வர் திறந்துவைத்தார்". செய்தி. தினமணி. 10 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 9 மே 2019.