அரசு பொது அலுவலக வளாகம், புதுக்கோட்டை

அரசுப் பொது அலுவலக வளாகம், புதுக்கோட்டை என்பது தமிழ்நாடு மாநிலத்திலுள்ள புதுக்கோட்டை நகரின் மையத்தில் அமைந்திருந்த ஒரு வளாகம் ஆகும். மாவட்ட அரசு நிர்வாகத்தின் கண்காணிப்பில் 40 ஆண்டுகளாக புதுக்கோட்டை பொது அலுவலக வளாகம் இருந்து வந்தது. இந்த அலுவலக வளாகத்தில் முக்கிய அரசு அலுவலகங்கள் இயங்கி வந்தன. தற்போது இது ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகமாக மாற்றப்பட்டுள்ளது.[1][2]

வரலாறு தொகு

தொண்டைமான் பரம்பரை மன்னரால் கட்டப்பட்டு மன்னர் நிருவாகத்திற்காகப் பயன்படுத்தி வந்துள்ளார். நாளடைவில் இது அரசு பொது அலுவலகமாக செயல்பட்டு வருகிறது.

அமைவிடம் தொகு

தஞ்சாவூர், மதுரை, பட்டுக்கோட்டை சாலைகள் சந்திக்கும் இடத்தின் தென் மேற்கு திசையில் அமைந்திருக்கும் இந்த பொது வளாகத்தின் வடக்குப்புறத்தில் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையும், அரசு மருத்துவனையும் உள்ளது. இதன் மேற்குப் பக்கம் காவலர் பயிற்சிப் பள்ளி மற்றும் காவலர் குடியிருப்பு உள்ளது. அரசு பொது அலுவலகமாக இயங்கும் இந்த வளாகம் நீதித் துறை, வருவாய்த்துறை கருவூலம், அரசு கிளை அச்சகம்[3], அஞ்சலகம் போன்றவை பொதுமக்களின் செயல்பாடுகளை எளிமைப்படுத்தும் விதமாக ஒருங்கே அமைந்துள்ளது. நான்கு பக்கமும் வழி உள்ளது. எளிதில் துருப்பிடிக்காத இரும்பு ஆணிகளும் எளிதில் உடையாத மண்ணால் ஆன சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு