அரசு பொறியியல் கல்லூரி, திருவரங்கம்
அரசு பொறியியல் கல்லூரி, திருவரங்கம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவரங்கம் கோட்டம், சேதுரப்பட்டியில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி ஆகும். இது 2013-ல் நிறுவப்பட்டது. இங்கு பொறியியல் துறையில் பல்வேறு படிப்புகள் வழங்கப்படுகிறது.
வகை | பொது |
---|---|
உருவாக்கம் | 2013 |
அமைவிடம் | சேதுராப்பட்டி, திருச்சிராப்பள்ளி மாவட்டம் , , 10°40′40″N 78°35′58″E / 10.677830°N 78.599487°E |
வளாகம் | நகரம் |
சேர்ப்பு | அண்ணா பல்கலைக்கழகம் |
இணையதளம் | http://www.gces.edu.in |
வரலாறு
தொகுதிருச்சிராப்பள்ளி மாவட்டம் சேதுராப்பட்டியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிக்கான முன்மொழிவைத் தமிழக அரசு 2013ஆம் ஆண்டு அறிவித்தது. இந்நிறுவனம் முழுமையாக ரூபாய் 60.01 கோடியில் 30.2 ஏக்கரில் நிறுவப்பட்டுள்ளது.
கல்வி
தொகுஇந்த நிறுவனம் இளநிலை பொறியியல் பட்டப்படிப்புக்கு வழிவகுக்கும் இளநிலை படிப்புகளை வழங்குகிறது. மேல்நிலைப் பள்ளித் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் தரவரிசையின் அடிப்படையில் இளநிலையில் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.
துறைகள்
தொகுநிறுவனம் பின்வரும் துறைகள் இக்கல்லூரியில் உள்ளன:[1]
- கணினி அறிவியல் பொறியியல்
- பொதுப் பொறியியல்
- இயந்திர பொறியியல்
- மின் மற்றும் மின்னணு பொறியியல்
- மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல்
- ஆங்கிலம்
- இயற்பியல்
- வேதியியல்
- கணிதம்
- நூலகம்
- நிர்வாக துறை
அமைவிடம்
தொகுஇக்கல்லூரி திருச்சிராப்பள்ளி நகரிலிருந்து 18 கி.மீ. தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 38-இல் சேதுரப்பட்டியில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Government College of Engineering – Srirangam". gces.edu.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 31 May 2018. Click "Academics" and then "Departments".