அரசு மேனிலைப் பள்ளி, உறந்தைராயன் குடிக்காடு

உறந்தைராயன் குடிக்காடு அரசு மேனிலைப் பள்ளி, தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரத்தநாடு வட்டத்தில், உறந்தைராயன் குடிக்காடு என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. இப் பள்ளி 1962 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, ஐம்பது ஆண்டுகள் நிறைவுற்று, பொன்விழா ஆண்டு நிறைவுற்றது. சுற்றியுள்ள ஊர்களைச் சேர்ந்தவர்கள் இப்பள்ளியில் பயில்கின்றனர்.

சின்னம்
சின்னம்

வரலாறு

தொகு

1962இல் தொடக்கப்பள்ளி கட்டிடத்தில் 9 ஆம் வகுப்பு தொடங்கப்பட்டது. உறந்தைராயன் குடிக்காடு ஊர் நலன் வளர்ச்சிக் கழக படிப்பகத்தின் ஒரு பகுதியில் தலைமை ஆசிரியர் அலுவலகமும், மற்றொரு பகுதியில் 9 - ஆம் வகுப்பும் இயங்கின. 1963 -இல் உயர்நிலைப் பள்ளி தொடக்க விழாவை காமராசர் தலைமை ஏற்று தொடக்கி வைத்தார். முன்னாள் குடியரசு தலைவர் ஆர். வெங்கட்ராமன் கலந்து கொண்டார்.

உறந்தைராயன் குடிக்காட்டு ஊர் நலன் வளர்ச்சிக் கழகத்தினரின் முயற்சியாலும், பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் கிடைத்த நன்கொடையாலும் கீற்றுக் கொட்டகைகள் அமைக்கப்பட்டு வகுப்புகள் நடந்தன. தரையில் அமர்ந்து மாணவர்கள் பயின்றனர், சுந்தரமூர்த்தி தற்போதைய தலைமையாசிரியராக இருக்கிறார்.

இணைப்புகள்

தொகு