அரவிந்த் சிதம்பரம்

அரவிந்த் சிதம்பரம் (பிறப்பு 11 செப்டம்பர் 1999) ஒரு இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆவார். அவர் 2018 மற்றும் 2019 இல் இரண்டு முறை இந்திய சதுரங்க சாம்பியன்ஷிப்பை வென்றார்.

Aravindh Chithambaram
London Chess Classic 2016 Day2-2 (31525646246) (cropped).jpg
Aravindh Chithambaram in 2016
நாடுஇந்தியா
பிறப்புசெப்டம்பர் 11, 1999 (1999-09-11) (அகவை 22)
திருநகர், தமிழ்நாடு, India
பட்டம்கிராண்ட்மாஸ்டர் (2015)
பிடே தரவுகோள்2611 (திசம்பர் 2021)
உச்சத் தரவுகோள்2641 (மார்ச் 2020)
தரவரிசைNo. 118 (ஜனவரி 2021)

தனிப்பட்ட வாழ்க்கைதொகு

அரவிந்த் 1999ஆம் ஆண்டு திருநகரில் பிறந்தார்.[1] [2]அவரின் மூன்று வயதில் அவரது தந்தை இறந்தார். அவரது தாயார் குடும்பத்தை பராமரிக்க ஆயுள் காப்பீட்டு நிறுவன முகவராக பணியாற்றினார். அவர் தொடர்ந்து மற்ற சிறுவர்களுடன் துடுப்பாட்டம் விளையாடியதால், அவரை வீட்டிற்குள் வைத்திருக்க அவரது தாத்தா அவருக்கு ஏழு வயதில் சதுரங்கம் கற்றுத் தந்தார். [3]

சதுரங்க வாழ்க்கைதொகு

அரவிந்த் 12 வயதில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய சதுரங்க சாம்பியன்ஷிப்பை வென்றார். அவர் 14 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக சதுரங்க சாம்பியன்ஷிப்பில் இரண்டாவது இடத்தை பெற்றார். [4]

2013 இல் சென்னை கிராண்ட்மாஸ்டர் சர்வதேச ஓபனில் 2728 ஈலோ செயல்திறன் மதிப்பீட்டு அளவில் விளையாடி , 9/11புள்ளிகள் பெற்று, தனது முதல் பெரிய போட்டியில் வென்றார். இந்தபோட்டியில் நான்கு கிராண்ட்மாஸ்டர்கள் மற்றும் இரண்டு சர்வதேச மாஸ்டர்களை தோற்கடித்தார். [3] இந்த முடிவு அவருக்கு முதல் கிராண்ட்மாஸ்டர் நெறியைப்பெற்றுத் தந்தது ; அந்த நேரத்தில் அவர் தனது சர்வதேச மாஸ்டர் விதிமுறைகளை அடையவில்லை. [4]

அவர் 2014 இல் தனது சர்வதேச மாஸ்டர் பட்டத்தையும் 2015 இல் அவரது கிராண்ட்மாஸ்டர் பட்டத்தையும் பெற்றார். [5] [6]

பிப்ரவரி 2018 இல், அவர் ஏரோஃப்ளாட் ஓபனில் பங்கேற்றார். 5/9 (+3–2 = 4) புள்ளிகள் பெற்று [7], தொண்ணூற்று இரண்டு போட்டியாளர்கள் பங்குபெற்ற இப்போட்டியில் இருபத்தி ஆறாவது இடத்தைபெற்றார் . [8]

வெளி இணைப்புகள் தொகு

குறிப்புகள்தொகு

  • Aravindh Chithambaram player profile and games at Chessgames.com
  • Aravindh Chithambaram rating card at FIDE
  1. IM title application (PDF). FIDE.
  2. GM title application (PDF). FIDE.
  3. 3.0 3.1 Kulkarni, Abhijeet (29 November 2013). "Meet India's newest chess star Aravind Chithambaram". Firstpost. பிழை காட்டு: Invalid <ref> tag; name "Firstpost2013" defined multiple times with different content
  4. 4.0 4.1 Kumar, P. K. Ajith (28 November 2013). "Aravindh Chithambaram: An exciting prospect". The Hindu. பிழை காட்டு: Invalid <ref> tag; name "TheHindu" defined multiple times with different content
  5. 1st quarter Presidential Board Meeting, Khanty-Mansiysk, RUS, 29 March - 1 April 2014 FIDE
  6. 1st quarter Presidential Board Meeting, 26-29 April 2015, Chengdu, CHN FIDE
  7. Staff writer(s) (28 February 2018). "Aeroflot Open 2018 A: Aravindh Chithambaram Vr". Chess Results.
  8. Staff writer(s) (28 February 2018). "Aeroflot Open 2018 A". Chess Results.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரவிந்த்_சிதம்பரம்&oldid=3293869" இருந்து மீள்விக்கப்பட்டது