அரவிந்த தாலி
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
அரபிந்த தாலி (Arabinda Dhali) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். பிச்சூ சனதா தளம் கட்சியில் உறுப்பினராக இருந்தார். அரபிந்த தாலி ஒடிசா சட்டமன்றத்தில் ஆறாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக உள்ளார் 1992 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரை [1] மல்காங்கிரியை பிரதிநிதித்துவப்படுத்தினார் [2] 2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை செயதேவ் சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். பிச்சூ சனதாதளம்-பாரதிய சனதா கட்சி கூட்டணியில் முன்னாள் போக்குவரத்து மற்றும் மாநகராட்சி அமைச்சராக இருந்தவர். [3] [4] 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி பாரதிய சனசக்தி கட்சியில் சேருவதற்காக ஒடிசாவின் பாரதிய சனதா கட்சியிலிருந்து விலகினார். ஒடிசா சட்டப் பேரவையின் முன்னாள் துணை சபாநாயகர் ராம சந்திர பாண்டாவுடன் பாரதிய சனசக்தி கட்சியில் இணைந்தார்.. 2008 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 24 ஆம் தேதியன்று இவர் சமாச்வாடி கட்சியில் சேர்ந்தார். [5] பின்னர், பிச்சூ சனதா தளம் கட்சியில் இணைந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sitting and previous MLAs from Jayadev Assembly Constituency". elections.in.
- ↑ "Sitting and previous MLAs from Malkangiri Assembly Constituency". elections.in.
- ↑ "'Daughter' roped in to defeat 'father'"
- ↑ "Former Minister Arabinda Dhali to join in the ruling BJD". Archived from the original on 2016-12-20. பார்க்கப்பட்ட நாள் 2023-11-02.
- ↑ "Orissa unit of Bharatiya Janshakti merges with SP". Archived from the original on 2021-02-12. பார்க்கப்பட்ட நாள் 2023-11-02.