அராகைட்டு (Arakiite) என்பது (Zn,Mn2+)(Mn2+,Mg)12(Fe3+,Al)2(As3+O3)(As5+O4)2(OH)23 என்ற வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வகை கனிமமாகும் [1]. கனிமவியல் உலகில் ஆர்சனைட்டு மற்றும் ஆர்சனேட்டு இரண்டும் கலந்த அபூர்வமான கனிமமாக இது கருதப்படுகிறது. எமட்டோலைட்டு கனிமத்தின் விகிதவியல் அளவுகளை ஒத்த கனிமம் அராகைட்டு ஆகும். சுவீடன் நாட்டிலுள்ள பிரபலமான சுரங்கப்பகுதியான லேங்பான் மாங்கனீசு பாறைப் படிவுப்பகுதியிலிருந்து கிடைக்கக் கூடிய அபூர்வமான கனிமங்களில் இதுவும் ஒன்றாகும். கிராய்சுலைட்டு, மக்கோவெர்னைட்டு என்பவை ஆர்சனைட்டு மற்றும் துத்தநாகம் இரண்டையும் உள்ளடக்கிய பிற கனிமங்களாகும் [2].

அராகைட்டு
Arakiite
பொதுவானாவை
வகைகனிமம்
வேதி வாய்பாடு(Zn,Mn2+)(Mn2+,Mg)12(Fe3+,Al)2(As3+O3)(As5+O4)2(OH)23
இனங்காணல்
நிறம்செம்பழுப்பு முதல் ஆரஞ்சு பழுப்பு
மோவின் அளவுகோல் வலிமை3-4
மிளிர்வுமண் போன்றது
கீற்றுவண்ணம்வெளிர் பழுப்பு, செம் பழுப்பு
ஒளிஊடுருவும் தன்மைஒளிகசியும், ஒளிபுகாது
ஒப்படர்த்தி3.41
அடர்த்தி3.41 கி/செ.மீ3

பன்னாட்டு கனிமவியல் சங்கம் அராகைட்டு கனிமத்தை Ark[3])Bss Msy[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Roberts, A.C., Grice, J.D., Cooper, M.A., Hawthorne, F.C., and Feinglos, M.N., 2000. A new Zn-bearing hematolite-like mineral from Långban, Värmland, Sweden. Mineralogical Record 31(3), 253-256
  2. "Arakiite: Arakiite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-04.
  3. Warr, L.N. (2021). "IMA-CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
  4. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அராகைட்டு&oldid=4149194" இலிருந்து மீள்விக்கப்பட்டது