அரிகர் நாத் சாசுத்திரி
அரிகர் நாத் சாசுத்திரி (Harihar Nath Shastri) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச்[1] சேர்ந்த இவர் கான்பூரின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் என்று அறியப்படுகிறார்.[2] தொழிலாளர் தலைவராகவும் இவர் தீவிரமாக பணியாற்றினார். 1920 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், பொதுவுடமை வாதியாகத் திகழ்ந்தார். ஆனால் 1930 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் மிதவாதியாகக் கருதப்பட்டார். 1948 ஆம் ஆண்டில் இந்திய தேசிய இரயில்வே தொழிலாளர் சம்மேளனத்தின் முதல் தலைவராக இருந்தார்.[3] 1925 ஆம் ஆண்டில் மக்கள் சேவகர்கள் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராக அதன் நிறுவனர்-இயக்குநர், மறைந்த லாலா லச்சபதி ராயால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடன் ஒரு வருடம் தனிச் செயலாளராகப் பணிபுரிந்தார். 1947 ஆம் ஆண்டில் இவர் இந்திய அரசியலமைப்புச் சபையில் உறுப்பினரானார், அது கலைக்கப்பட்டவுடன் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரானார்.
அரிகர் நாத் சாசுத்திரி Harihar Nath Shastri हरि हर नाथ शास्त्री | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் 1952–1953 | |
பின்னவர் | சிவ நாராயண் தண்டன் |
தொகுதி | கான்பூர் மக்களவைத் தொகுதி Central]] |
சட்டமன்ற உறுப்பினர், உத்தரப் பிரதேசம் | |
பதவியில் 1936–1939 | |
பதவியில் 1946–1947 | |
தலைவர், அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசு | |
பதவியில் 1933–1935 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1905 பலியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
கல்வி | பட்டதாரி பனாரசு இந்து பல்கலைக்கழகம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Brass, Paul (1965). Factional Politics in an Indian State: The Congress Party in Uttar Pradesh. University of California Press. pp. 197. பார்க்கப்பட்ட நாள் 29 April 2014.
harihar nath shastri.
- ↑ Joshi, Chitra (2003). Lost Worlds: Indian Labour and Its Forgotten Histories. Orient Blackswan. p. 290. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788178240220. பார்க்கப்பட்ட நாள் 29 April 2014.
- ↑ "History: National Federation of Indian Railwaymen". பார்க்கப்பட்ட நாள் 29 April 2014.