அரிக்கல் அருவி
அரிக்கல் அருவி (Areekkal Waterfalls) என்பது கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் தொடுபுழா - எர்ணாகுளம் சாலையில் எர்ணாகுளம் நகரிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் பாம்பாக்குடாவில் அமைந்துள்ளது.[1]
அரிக்கல் அருவி | |
---|---|
அமைவிடம் | எர்ணாகுளம் மாவட்டம், கேரளா, இந்தியா |
நீளமான வீழ்ச்சியின் உயரம் | 100 அடி |
கண்ணோட்டம்
தொகுஎர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பாம்பக்குடா பஞ்சாயத்தில் அமைந்துள்ள அரிக்கால் அருவி முன்பு வரை சுற்றுலாப் பயணிகளால் அதிகம் அறியப்படவில்லை.[2] 2014ஆம் ஆண்டில் கேரள அரசு அரிக்கல் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கிய பிறகு மக்கள் ஈர்ப்பை இந்த அருவி பெற்றது.[3] இது பிரமடம்-வெட்டிமுடு வழித்தடத்தில் அமைந்துள்ளது. பின்னணியில் காடு மற்றும் ரப்பர் தோட்டங்களுடன் இந்த அருவி சுமார் 100 அடி உயரத்தில் அமைந்துள்ளது.[4] இது பாம்பகுடாவில் உள்ள முக்கிய உள்நாட்டுச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.[5] இந்த அருவி திருமாரடி ஊராட்சியில் உள்ள மண்ணத்தூர் மலையிலிருந்து உருவாகிறது. இது 70 அடிக்கு மேல் பாறைகளுக்கு மேல் இருந்து கீழே வருகிறது. இந்த அருவியில் நீர் மூன்று நிலைகளாக விழுகிறது. பயணிகள் அணுகுவதற்கு மூன்றாம் நிலைக்குக் கீழே ஒரு தடுப்புப் பகுதி கட்டப்பட்டுள்ளது.[6] அரிக்கல் அருவிக்கு அருகிலுள்ள மற்ற குறிப்பிடத்தக்க இடங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் கொச்சரீக்கல் குகைகள், மண்டலம் மலை, மயிலாடம் பாறை, சூலம் அருவி, பழூர் படிபுரா, பழூர் பெரும் திருக்கோவில் கோயில் மற்றும் பிறவம் வலியப் பள்ளி உள்ளன.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Areekkal Waterfalls | Tourist Places in Ernakulam | Top Waterfalls in Kerala". Kerala Tourism (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-10.
- ↑ "എറണാകുളത്തുണ്ടൊരു വെള്ളച്ചാട്ടം; എവിടെയാണെന്ന് അറിയാമോ?". Samayam Malayalam (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-10.
- ↑ ഡെസ്ക്, വെബ് (2022-06-07). "അരീക്കൽ ഉദ്യാനം പദ്ധതിക്ക് തുടക്കം". www.madhyamam.com (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-10.
- ↑ "So close, yet so surreal". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2023-02-10.
- ↑ "Areekkal waterfalls, an untouched and pristine tourist destination". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2023-02-10.
- ↑ "ചാട്ടം അത്ര പോര; അരീക്കൽ വെള്ളച്ചാട്ടം ശോഷിച്ചു". ManoramaOnline (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-10.
- ↑ "അരീക്കൽ വിളിക്കുന്നു; സഞ്ചാരികളേ വരൂ." Deshabhimani (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-10.