அரிசில் ஆறு

அரிசில் என்பது ஓர் ஆறு. காவிரி ஆற்றின் கிளை ஆறு.

  • நற்றிணை 141
வெள்ளம் குறைந்த காலத்தில் இதன் மணல் அறல் அறலாகப் படிந்து அழகாகக் காணப்படும். இந்த மணல்-படிவைச் சல்லியங்குமரனார் தன் பாடல் தலைவியின் கூந்தலுக்கு உவமையாக்கிக்கொண்டுள்ளார். இது ஓடும் பகுதியில் அம்பர் என்னும் ஊர் சங்ககாலத்தில் மிகவும் புகழ்பெற்ற ஊராகத் திகழ்ந்தது. இந்த ஊரின் அரசன் கிள்ளி.'இசைவெங்கிள்ளி' என்று போற்றப்படுகிறான். இவன் யானைமேல் சென்று போரிட்டான். போர் சோழனின் அம்பர் நகரில் நடைபெற்றது. அம்பர் நகரைத் தாக்கியவன் பாண்டில் (பாண்டியன்). போரில் கிள்ளி வெற்றி பெற்றான்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிசில்_ஆறு&oldid=688830" இருந்து மீள்விக்கப்பட்டது