அரிச்சந்திர புராணம்
அரிச்சந்திர சரித்திரம்[1] என்னும் நூல் அரிச்சந்திர புராணம் என வழங்கப்படுகிறது. இந்நூல் புராணம் என்னும் பெயரோடு அச்சிடப்பட்டிருந்தாலும் புராணம் அன்று காப்பியம்.[2]
இருபதாம் நூற்றாண்டின் முற்பாதி காலம் வரையில் இந்நூல் பலராலும் பயிலப்பட்டுவந்தது. இது வடமொழி நூலைத் தழுவி எழுதப்பட்ட தமிழ்க்காப்பியம். 16-ஆம் நூற்றாண்டில் தோன்றியது.[3]
இதன் ஆசிரியர் பெயர் ‘வீரன்’.[4] இவரைக் ‘கவிராசர்’ எனச் சிறப்புப்பெயரால் அழைப்பர். [5] ஊர் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள நல்லூர். இதனைக் குலோத்துங்க சோழநல்லூர் என்றும் கூறுவர்.
நூல்
தொகுவீரகவிராசரின் அரிச்சந்திர புராணத்துக்கு மூலநூலாக அரிச்சந்திர வெண்பா என்னும் நூலும் இருந்தது. அரிச்சந்திர புராணம்,
- விவாக காண்டம்
- இந்திர காண்டம்
- வஞ்சனைக் காண்டம்
- வேட்டஞ்செய் காண்டம்
- சூழ்வினைக் காண்டம்
- நகர் நீங்கிய காண்டம்
- காசி காண்டம்
- மயான காண்டம்
- மீட்சிக் காண்டம்
- உத்தர காண்டம்
என்னும் பத்துக் காண்டங்களைக் கொண்டது. இந்நூலில் 1215 பாடல்கள் உள்ளன.
பாடல்
தொகுசந்தப்பா
தொகு- பெரும்புகழை பெறும்படி அருந்துயர் கெடும்படி பிரியம்பல வரும்படி யுளம்
- விரும்பிய தனம்பெற மிகும்பெரு பதம்பெற விளங்கிய தவம்செய நெடும்
- கரும்பவல் பெரும்பயன் தருகனி ரசங்கொடு கவர்ந்ததேன் உவந்தருள் புரிந்
- இருங்கரி முகன்சிறு சதங்கையொடு கிண்கிணி இலங்கிய பதம்பெறு வனே [6]
மடக்கு
தொகு- அறமி ருக்கும் மனத்தில் அனைவர்க்கும்
- திறமி ருக்கும் புயத்தில் செழுஞ்சுடர்
- நிறமி ருக்கும் படையின்கண் நீக்கமில்
- மறமி ருக்கும் மடந்தையர் கண்ணினே [7]
நகர் நீங்கு படலம்
தொகு- தொடைதுறந்து முடிதுறந்து பணிதுறந்து துடிமுரசம் துரந்து தாமக்
- குடைதுறந்து வெண்கவரிக் குழாம்துறந்து கரிபரிதேர்க் குலம்து றந்து
- கடைதுறந்து மறுகணைந்த காவலன்தன் திரிமுகத்தைகு கண்டோ ரெல்லாம்
- அடையமனம் அழிந்துருகி அவரவரே முகத்தில்மறைந் தழுவார் ஆனார்[8]
இப்படியெல்லாம் மரபுவழியில் வந்த வளமான தமிழ்நடையை இந்நூலில் காணமுடிகிறது.
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1838 தணிகை சரவண பெருமாள் ஐயர் பதிப்பு. மற்றும் காஞ்சி குமாரசாமி தேசிகர் பதிப்பு
- ↑ பெரியபுராணம் என்பதை எண்ணுக.
- ↑ சாலிவாகன சகாப்தம் 1446. அதற்கு இணையான ஆங்கில ஆண்டு 1524.
- ↑ ‘நல்லூர் வீரக்கவிராயன்’ சோலைக்கண் கவிகள் குதிபாயும் நல்லூர் வீரக் கவிராசனே விருத்தக்கவி செய்தானே - நூலின் பாயிரம் 1
- ↑ நல்லூர்வாழ் வீரன் ஆக கவிராசன் கவியரங்கம் ஏற்றினானே – நூல் பாயிரம் 2
- ↑ பிள்ளையார் வணக்கம்
- ↑ நகர்ச்சிறப்பு
- ↑ அரசன் துறந்ததும் மக்கள் அழுகையும்
உசாத்துணை
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு – பதினாறாம் நூற்றாண்டு, 2005