அரிந்தர் சிங்
இந்திய அரசியல்வாதி
அரிந்தர் சிங் (Harinder Singh) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1917 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். 1969 ஆம் ஆண்டு முதல் 1971 ஆம் ஆண்டு வரை பஞ்சாப் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றினார்.[2] மேலும் கியானி குர்முக் சிங் முசாபிரின் அமைச்சரவையில் 1966 ஆம் ஆண்டு முதல் 1967 ஆம் ஆண்டு வரை வருவாய் மற்றும் தொழில்துறை அமைச்சராகவும் இருந்தார். 1945 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று மத்திய சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.[3] இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினரான அரிந்தர் சிங் 1972 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 31 ஆம் நாள் தனது 55 ஆவது வயதில் அமிருதசரசு நகரத்தில் இறந்தார்.[4]
அரிந்தர் சிங் Harinder Singh | |
---|---|
பஞ்சாப் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் | |
பதவியில் 17 பிப்ரவரி 1969 – 14 சூன் 1971 | |
முன்னையவர் | குர்னம் சிங் |
பின்னவர் | இயசுவிந்தர் சிங் பிரார் |
தொகுதி | அச்னலா |
சட்டமன்ற உறுப்பினர், இந்திய பஞ்சாபின் சட்டமன்றம்[1] | |
பதவியில் 1962–1967 | |
முன்னையவர் | அச்சர் சிங் சின்னா |
பின்னவர் | தலிபு சிங் |
தொகுதி | அச்னலா |
பதவியில் 1969–1972 | |
முன்னையவர் | தலிபு சிங் |
பின்னவர் | அர்சரன் சிங் |
தொகுதி | அச்னலா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1917 |
இறப்பு | (அகவை 55) அமிர்தசரசு, இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
மேற்கோள்கள்
தொகு- ↑ Punjab assembly constituency-Ajnala
- ↑ page 158 of Punjab Vidhan Sabha Compendium. Punjab Legislative Assembly. Retrieved on 24 July 2019.
- ↑ Historical Constitution
- ↑ "Lok Sabha Debates". Lok Sabha Secretariat. 1972. p. 1. பார்க்கப்பட்ட நாள் 29 July 2022.