அரிய தங்கம் கோயில்

அரிய தங்கம் கோயில் என்பது தமிழ்நாட்டில் உள்ள நாட்டுப்புறக் கோயிலாகும்.

அரியதங்கம் கோயில்

அமைவிடம் தொகு

இக்கோயில் திருவையாறு-கும்பகோணம் சாலையில், கவித்தலத்திற்கு முன் உள்ள சருக்கை என்னும் சிற்றூரில் இருந்து வடதிசையில் இரண்டு கிமீ தொலைவில் கொள்ளிடம் ஆற்றின் நடுவில் ஒரு பெரிய மணல் திட்டில் அமைந்துள்ளது. அரை கிலோ மீட்டர் அளவு நீளமுள்ள இத்திட்டு கீழராம நல்லூர் என்றழைக்கப்படுகிறது. இக்கோயில் அமைந்துள்ள பகுதியில் ஓங்கி உயர்ந்த மரங்கள், கருவேல மரங்கள், முற்புதர்கள் நிறைந்த காடுகள் நிறைந்துள்ளன.

மணல்திட்டு தொகு

 
மணல் திட்டு

அருகே உள்ள மற்றொரு மணல் திட்டில் இரண்டுத் தெருக்கள் உள்ளன. சுமார் ஐம்பது அல்லது அறுபது வீடுகள் இருக்கும். இரண்டுத் தெருக்களைச் சுற்றிலும் காடு காணப்படுகிறது. இங்கு வசிப்பவர்கள் எந்தவொரு சிறு பொருள் வாங்க வேண்டும் என்றாலும், மளிகையோ, அவசரத்திற்கு மருந்தோ, பகலோ, இரவோ, ஒரு கீலோ மீட்டருக்கும் மேல், ஆற்று மணலைக் கடந்து, நடந்து சென்றுதான் வந்தாக வேண்டும். சின்னஞ்சிறு குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதென்றாலும், இவ்வாற்று மணலைக் கடந்துதான் தினமும் சென்றாக வேண்டும். கடினமாக வாழ்க்கை வாழ்கிறார்கள். கொள்ளிடம் ஆற்றில் தண்ணீரோ, வெள்ளப் பெருக்கோ ஏற்பட்டால் இவர்கள் இத்திட்டிலேயே இருக்க வேண்டிவரும். படகில் மிதந்துதான் வெளியேற முடியும்.

மூலவர் தொகு

இக்கோயிலின் மூலவர் அப்பாலிக் கூத்த அய்யனார், அரியதங்கம் மற்றும் கூத்தாயி ஆகிய இரு தேவியருடன் கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளார். கோயிலின் எதிரில் இடது புறத்தில் கருப்புசாமியும், வலது புறத்தில் மதுரை வீரனும் உள்ளனர். கோயில் வளாகத்தில் பாப்பாத்தி அம்மன் உள்ளார். கோயிலுககு எதிரில் ஓடு வேயப்பட்ட நாற்புறமும் திறந்த நிலையிலுள்ள நீண்ட கட்டிடத்தில் உணவுக்கூடம் உள்ளது. கிடா வெட்டி முடிந்ததும், இங்குதான் விருந்து நடைபெறும்.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

புகைப்படத் தொகுப்பு தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிய_தங்கம்_கோயில்&oldid=2305216" இலிருந்து மீள்விக்கப்பட்டது