அரீசு காரே (Harish Khare ) என்பவர் ஓர் இதழாளர் மற்றும் பத்திரிகை ஆசிரியர் ஆவார்.[1] 2009 சூன் முதல் 2012 சனவரி வரை இந்தியத் தலைமை அமைச்சரின் ஊடக ஆலோசகராக இருந்தார்.

அரீசு காரே

பின்னர் இந்து ஆங்கில செய்தித்தாளில் பதிப்பாசிரியராக புதுதில்லி அலுவலத்தில் பணிசெய்தார். '21 ஆம் நூற்றாண்டில் நேரு வழி செயல்பாட்டு தலைமைப் பாணியில் இந்தியாவின் ஆளுகை' என்ற இவருடைய திட்டத்திற்காக சவகர்லால் நேரு பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. திரிபியூன் பத்திரிகைகளின் குழுமத்தில் முதன்மை ஆசிரியராக 2015 சூன் முதல் 2018 மார்ச்சு வரை இருந்தார். ரீனானா ஜாப்வாலா என்ற சமூகச் செயற்பாட்டாளரைத் திருமணம் செய்து கொண்டார்.

மேற்கோள்

தொகு
  1. "Harish Khare resigns as media advisor to PM". IBN Live. 19 January 2012. Archived from the original on 22 January 2012. பார்க்கப்பட்ட நாள் 20 ஆகஸ்ட் 2018. {{cite web}}: Check date values in: |access-date= (help); Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரீசு_காரே&oldid=3585972" இலிருந்து மீள்விக்கப்பட்டது