அரீன் ஆக்சைடு
அரீன் ஆக்சைடு (Arene oxide) என்பது வேதியியலில் ஓர் அரீனின் எப்பாக்சைடைக் குறிக்கும். அரீன் ஆக்சைடுகளின் இரண்டு முக்கியமான குடும்பங்கள் பென்சீன் ஆக்சைடுகள் மற்றும் நாப்தலீன் ஆக்சைடுகள் என்பவையாகும். இவை இரண்டும் பொதுவான மாசுபடுத்திகளான பென்சீன் மற்றும் நாப்தலீனின் ஆக்சிசனேற்ற சிதைவு இடைநிலைகளாகும்.[1]
பென்சோபைரீனையும் ஓர் எப்பாக்சைடாக ((+)-பென்சோ[a]பைரீன்-7,8-எப்பாக்சைடு.) மாற்ற இயலும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட வினைகள்
தொகுபென்சீன் ஆக்சைடு (C6H6O) மூன்று இரட்டைப் பிணைப்புகளைக் கொண்ட ஏழு-உறுப்பு வளைய ஆக்சிபின்னுடன் வேதியியற் சமநிலைச் சேர்மமாக உள்ளது. வேதியியற் சமநிலையில் சிதைக்கும் 6π வளையத்தை மூடுதல் மற்றும் திறப்பதன் மூலம் இவை இணைதிற மாற்றியன்களாக கருதப்படுகின்றன.[2][3]
அரீன் ஆக்சைடுகள் அதிக வினைத்திறன் கொண்டவை. பென்சீன் ஆக்சைடும் நாப்தலீன்-1,2-ஆக்சைடு நீரேற்றும் முறையே ஈரைதராக்சி ஐதரோபென்சீன் மற்றும் 1,2-ஈரைதராக்சி ஈரைதரோநாப்தலீன் ஆகியவற்றை கொடுக்கின்றன. நீரேற்ற வினை எப்பாக்சைடு ஐதரலேசு நொதியால் வினையூக்கம் செய்யப்படுகிறது. இந்த டையால்களின் நீரிழப்பு, மறு அரோமாட்டிக்காதல் வினை மூலம் இயக்கப்படுகிறது. பீனால் மற்றும் 1-நாப்தால் சேர்மங்கள் உருவாகின்றன. 1,2-ஈரைதராக்சி ஈரைதரோநாப்தலீன், ஈரைதரோடையால் டியைதரனேசு நொதியால் வினையூக்கப்பட்டு ஆக்சிசனேற்ற வினை நிகழ்வதால் 1,2-நாப்தோகுயினோன் உருவாகிறது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "The toxicology of benzene". Environ. Health Perspect. 100: 293–306. April 1993. doi:10.1289/ehp.93100293. பப்மெட்:8354177.
- ↑ "Benzene Oxide-Oxepin Valence Tautomerism". Angewandte Chemie International Edition in English 6 (5): 385–401. 1967. doi:10.1002/anie.196703851.
- ↑ Bansal, Raj K. (1999). Heterocyclic Chemistry (3 ed.). New Delhi: New Age International. p. 378. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788122412123.
- ↑ "The chemical biology of naphthoquinones and its environmental implications". Annu. Rev. Pharmacol. Toxicol. 52: 221–47. 2012. doi:10.1146/annurev-pharmtox-010611-134517. பப்மெட்:21942631.