ஆக்சிபின்
வேதிச் சேர்மம்
ஆக்சிபின் (Oxepin) என்பது ஆக்சிசனைக் கொண்டுள்ள ஒரு பல்லின வளையமாகும். இதில் ஏழு உறுப்புகள் கொண்ட வளையம் மூன்று முப்பிணைப்புகளால் பிணைக்கப்பட்டுள்ளன. இதனுடைய மூலச் சேர்மமான C6H6O பெண்சீன் ஆக்சைடுடன் வேதியியற் சமநிலை கொண்ட சேர்மமாகக் காணப்படுகிறது.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
ஆக்சிபின் | |||
வேறு பெயர்கள்
ஆக்சாவளையயெப்டாடிரையீன்
| |||
இனங்காட்டிகள் | |||
291-70-3 | |||
ChemSpider | 4953942 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 6451477 | ||
| |||
UNII | CVP5X85XX5 | ||
பண்புகள் | |||
C6H6O | |||
வாய்ப்பாட்டு எடை | 94.11 g·mol−1 | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
ஆக்சிபின்-பென்சீன் ஆக்சைடு வேதிச் சமநிலையானது வளைய பதிலீடுகளால் பாதிக்கப்படுகிறது.[1] ஒரு தொடர்புடைய இருமெத்தில் வழிப்பெறுதி முக்கியமாக ஆக்சிபின் சேர்மத்தின் மாற்றியனாகும். அது, ஆரஞ்சு நிற திரவமாக உள்ளது.[2]
சைட்டோகுரோம் பி450 என்ற நொதியின் மூலம் பென்சீன் ஆக்சிசனேற்றம் செய்யப்படுவதால் ஆக்சிபின் ஓர் இடைநிலையாக உருவாகிறது.[3] மற்ற அரீன் ஆக்சைடுகள் பெற்றோர் அரீனின் வளர்சிதை மாற்ற வழிப்பெறுதிகளாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Vogel, E.; Günther, H. (1967). "Benzene Oxide–Oxepin Valence Tautomerism". Angewandte Chemie International Edition in English 6 (5): 385–401. doi:10.1002/anie.196703851.
- ↑ Leo Paquette; Barrett, J. H. (1969). "2,7-Dimethyloxepin". Org. Synth. 49: 62. doi:10.15227/orgsyn.049.0062.
- ↑ Snyder, R.; Witz, G.; Goldstein, B. D. (1993). "The Toxicology of Benzene". Environmental Health Perspectives 100: 293–306. doi:10.1289/ehp.93100293. பப்மெட்:8354177.