அருகன்குளம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அருகன்குளம் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம்
ஊரின் அமைப்பும் எல்கைகளும்
தொகுதிருநெல்வேலி மாவட்டத்தின் வட எல்லையில், குறிப்பாக சங்கரன்கோவில் மற்றும் ராஜபாளையம் சாலையின் வழியில் சுமார் 15 கிமீ தொலைவில் செந்தட்டியாபுரம்-அருகன்குளம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து 2 கிமீ உட்புறமாக அமைந்துள்ளது. வடமேற்கில் மந்திமலை எனப்படும் மலை குன்றும், தென்மேற்கில் தென்மலை மலையும், தென்கிழக்கில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி குடியிருக்கும் மலையும் எல்லைகளாய் உள்ளன. தென்புறத்தில் குளத்தின் அருகில் வீற்றிருக்கிறது.
பெயர்க்காரணம்
தொகுஅருகில் குளம் அமைந்து உள்ளதும், ஊரின் தலைவாசலாகவும் குளம் இருப்பதுமே தலையாயகாரணம். மற்றும் சிலர் அருகம்புல் நிறைந்து காணப்படும் குளம் ஆதலின் அருகம்புல் குளம் பின்னாளில் மருவி விட்டதாகவும் கூறுவர்.
முக்கிய தொழில்கள்
தொகுவிவசாயமே முக்கிய உயிர்நாடி ஆகும். நெல், கரும்பு, பருத்தி, காய்கறிகள் இவற்றுடன் எலுமிச்சையும் அதிக அளவில் விளைவிக்க படுகிறது. விவசாயம் முழுக்க முழுக்க குளத்து நீர் மற்றும் நிலத்தடி நீரை மட்டுமே நம்பி இருப்பினும், விவசாயிகளின் விவேகமான அணுகுமுறையால், தண்ணீர் மேலாண்மை மிகவும் சிறப்பாக சமாளிக்கப்படுகிறது.
ஊரின் சிறப்புகள்
தொகுஊரின் மக்கள் தொகையில் 90% தேவர் (மறவர்) சமூகத்தினரும், 8% ஆதிதிராவிடர்களும், 2% மற்ற சமூகத்தினரும் வசிக்கின்றனர்.