அருணகிரிப் புராணம்

அருணகிரிப் புராணம் தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் மறைஞான சம்பந்தர் என்னும் புலவர் பாடிய நூல். இவர் சிதம்பரத்தில் வாழ்ந்தவர். இவரைக் ‘கண்கட்டி மறைஞான சம்பந்தர்’ எனவும் வழங்குவர். இவரது காலத்திலேயே இவர் பாடிய அண்ணாமலையைப் பற்றிப் பாடப்பட்ட நூல் அருணாசல புராணம்.

அருணகிரிப் புராணத்தில் எட்டுச் சருக்கங்கள் உள்ளன. பாடல்கள் 613. பாயிரப் பகுதியில் 35 பாடல்கள். இதில் தெய்வங்கள் மட்டுமல்லாமல் காரைக்காலம்மை, நால்வர், திருமாலிகைத்தேவர், மெய்கண்டார் போன்ற தமிழ்ப்பெருமக்களும் போற்றப்படுகின்றனர்.

  • அருணாசலோதயச் சருக்கத்தில் அயன், மால் ஆகியோரின் செருக்கை அடக்கச் சிவன் அருணகிரியாக எழுந்த கதை சொல்லப்படுகிறது.
  • அருந்தவச் சருக்கத்தில் உமையம்மை கதை சொல்லப்படுகிறது. கயிலையில் உமை, சிவன் கண்ணைப் புதைத்தாள். இந்தப் பாவம் நீங்கக் காஞ்சியில் பிறந்து தவம் செய்தாளாம்.
  • வலம்புரிச் சருக்கத்தில் கோயிலையும் அண்ணாமலையையும் வரும் சிறப்பு கூறப்படுகிறது.
  • ஆலயத்தொடு புரியாக்கிய சருக்கத்தில் சிற்பிகள் கோயில் கட்டிய செய்தி சொல்லப்படுகிறது.
  • இவரது செய்யுள்களில் சொல்-மடக்கு அணி பரவலாகக் காணப்படுகிறது. சந்தப் பாடல்களும் விரவி வருகின்றன.

பாடல்கள்

  • கடைமடக்கு
கருவினை கழிக்கலாம், கரியகட் டழிக்கலாம்,
ஒருமையுற்(று) இருக்கலாம்
தண்ணார்மதி சூடுஞ்சடை முடியான்அடல் விடையான்
அண்ணார்புரத்(து) ஒருமால்வரை நயந்(து)அன்(று) புரிந்தான்.
  • காலம் 16-ஆம் நூற்றாண்டு

கருவிநூல்

தொகு
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருணகிரிப்_புராணம்&oldid=4115935" இலிருந்து மீள்விக்கப்பட்டது